Translate

Tuesday, 5 February 2013

விட்டலன் கதை 15

சிவன் கேட்ட விட்டல் பஜனை
by J.K. Sivan

கொளுத்தும் வெயிலில் நாமதேவரும் ஞானேஸ்வரும் எண்ணற்ற பக்தர்களும் ராஜஸ்தான் பாலைவனத்தில் நீரின்றி உணவின்றி வாடி வதங்கினாலும், விட்டலனின் நாம சங்கீர்த்தனத்தை நிறுத்தவில்லை. "விட்டலா" என்று மயங்கி விழுந்தார் ஞானேஸ்வர். கண்ணுக் கெட்டிய தூரம் ஒரு வீடோ கிராமமமோ ஒதுங்க நிழலோ தென்படவில்லை. மனித சஞ்சாரமற்ற வெறும் பாலைவனம். "உடனே வாயேன் வந்து எங்களுக்கு ஏதாவது வழிகாட்டேன்?" என்று கெஞ்சினார் ஞானேஸ்வர். ஆனால் நாமதேவர் " கட்டாயம் விட்டலன் வந்து நமக்கு உதவுவான் கவலை வேண்டாம்" என்று நம்பிக்கையை அனைவருக்கும் ஊட்டினார்.
விட்டலன் வரவில்லை ஆனால் அவனது சுதர்சன சக்ரம் வந்து விட்டது! பூமியை குடைந்து அமுதெனும் இனிய குளிர்ந்த நீரூற்று அவர்களுக்கு கிடைக்க வழி செய்து மறைந்தது. சமய சஞ்சீவியாக வந்து உதவிய சுதர்சன சக்ரத்தை போற்றி பாடி அனைவரும் தாகம் தீர்ந்து களைப்பு நீங்கி புத்துணர்ச்சியுடன் உத்சாகமாக பயணம் தொடர்ந்தனர். ஒரு சிற்றூர் வந்தது. அதில் சில பக்தர்கள் உணவு வழங்கி அனைவரும் பண்டரிபுரம் திரும்பினர்.
இதே போல் மற்றொரு யாத்ரையில் நிகழ்ந்த சம்பவம் இங்கு குறிப்பிட்டாகவேண்டும். அன்று சிவராத்திரி. அவர்கள் இருந்ததோ பீகாரில் இப்போது தேவ்கார் என்று அழைக்கப்பட்டு அக்காலத்தில் வைத்யநாதம் என்ற அருமையான பெயருடன் விளங்கிய ஒரு க்ஷேத்ரம். இதன் பெருமை உங்களுக்கு தெரியுமே! 12 ஜோதிர் லிங்கத்தில் இந்த ஊர் லிங்கமும் ஒன்று. ஞானேஸ்வர் நாமதேவர் கோஷ்டி இந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடுவார்களா?

மூல விக்ரக சிவலிங்கம் முன் அமர்ந்து வழக்கமான விட்டல் நாம சங்கீர்த்தனம் தொடங்கினர். அந்த கோவில் பிரதம அர்ச்சகர் காதில் இது நாராசமாக விழுந்திருக்கும் போல இருக்கிறது! எப்படி இவர்களை தடுப்பது என்று யோசித்து "இப்போது இங்கு சிவனுக்கு அர்ச்சனை, அபிஷேகம் எல்லாம் நடைபெற இருக்கிறது. மேலும் இது சிவன் கோயில். இங்கு போய் விஷ்ணுவை போற்றி பாடுகிறீர்களே!" என்றார்.

"சுவாமி, க்ஷமிக்கணும். சிவபெருமான் எங்களை ஆக்னையிட்டு தான் அவர் முன் நாங்கள் நாம சங்கீர்த்தனம் செய்கிறோம். அவர் வேண்டாமென்றால் அடுத்த கணம் நாங்கள் நிறுத்தி விடுகிறோம்" என்று ஞானேஸ்வர் பதிலளித்தார். இது ஒரு பிரச்னையாகி விடக்கூடதே என்று ஆலய நிர்வாகிகள் குறுக்கிட்டு மூல விக்ரஹமான சிவன் சந்நிதிக்கு பின்புறம் ஒரு இடம் ஒதுக்கி அவர்களை அங்கு நாமசங்கீர்த்தனம் செய்ய அனுமதித்தனர்.
பஜனை கோஷ்டி அங்கு அமர்ந்து தொடர்ந்தது. அர்த்த ஜாம கால பூஜைஎல்லாம் முடிந்து கோயில் நடை சார்த்தப்பட்டது. வெளியே பிரகாரத்தில் சிவராத்ரி இரவு பூரா நாம சங்கீர்த்தனம் பஜனை தொடர்ந்து கொண்டே இருந்தது. விடியற் காலை மறுநாள் அர்ச்சகரும் மற்றோரும் ஆலயம் திறந்து பூஜைகளை ஆரம்பிக்க சிவபெருமான் சந்நிதி கதவை திறந்தபோது அதிர்ச்சி அடைந்தனர்.
ஜோதிர் லிங்கம் பின் பக்கமாக திரும்பி காட்சி யளித்தது. சந்நிதி சுவருக்கு பின் பக்கம் தானே நாமதேவர் ஞானேஸ்வர் பக்த பாகவத சிரோமணிகள் அமர்ந்து சிவராத்திரி இரவு பூரா நாம சங்கீர்த்தனம் ஜோராக நடந்துகொண்டிருந்தது! தங்கள் தவறை உணர்ந்தனர் அர்ச்சகரும் மற்றோரும். அவர்களது விட்டலன் நாம சங்கீர்த்தனம் தனக்கு உகந்ததே என்று உணர்த்தவே சிவன் திரும்பினான் என்று புரிந்து கண்ணீர் மல்க ஓடி நாமதேவர் ஞானேஸ்வர் கால்களில் விழுந்து மன்னித்தருள வேண்டினர்.


The writer can be reached at: jksivan@gmail.com
 
Who Is Krishna? ..... (11)
 
 

Krishna, as He is described in Srimad Bhagavatam, Canto 10


Krishna is the Limit of all good (84.21).

Krishna is Omnipotent (37.12).

Krishna is the Lord of Lakshmi, the Presiding Deity of all riches (47.46).

Krishna is the Internal Guide of all (63138, 7216).

Krishna is the Stay (Ashraya) of all (40.15).

Krishna is Witness and Seer of Self (86.31).

Krishna is the Refuge of the good (80.9).

Krishna is most difficult to serve (88.11).

Krishna is the Friend of one’s heart (48.26).
(to be concluded)
*** 

Saturday, 2 February 2013

Tulsi Worship



There is no better recipient of charity than vipra,
no better gift than giving of cows,
no better tirtha than the Ganga,
and no better leaf than the Tulsi leaf.
The fragrance of Tulsi-devi purifies all who smell it.

"Tulsi leaf is very, very dear to Vishnu. All Vishnu-tattva Deities require profusely Tulsi leaves. Lord Vishnu likes garland of Tulsi leaves. Tulsi leaves mixed with sandalwood pulp and placed on the lotus feet of the Lord is the topmost worship".
 
***

Friday, 1 February 2013

Who Is Krishna? ..... (10)

Krishna, as described in Srimad Bhagavatam, Canto 10

 
Krishna is the Lord of all (37.23).

Krishna is the Stay (Ashraya) of all entities (82.46).

Krishna is All-pervasive and Eternal (9.13).

Krishna is the Soul of all elements (86.31).

Krishna is the Knower of the minds of all elements (81.1).

Krishna is the soul’s self of all elements (74.24).

Krishna is the lnner Soul of all elements (37.11).

Krishna is the Internal Guide of all elements (47.29)

Krishna is the Cause of the origin of all elements (64.29).
***
விட்டலன் கதை 14

பசு
by J.K. Sivan

ஞானி ஞானேஸ்வரும் பரம பாகவதர் நாமதேவரும் யாத்திரை தொடங்கும்போது விரல் விட்டு எண்ணக்கூடிய எட்டு பத்து பேர் மட்டுமே தொடர்ந்தனர். அவர்கள் ஊர் ஊராக சென்று நாமசங்கிர்தனம் செய்தபின் பத்து நூறாகியது.ஆடிப்பாடிக்கொண்டு அவர்கள் அனைவரும் டெல்லி தெருக்கள் வழியாக வரும்போது ஒரு லக்ஷத்துக்கும் மேலாக பக்தர்கள் கூட்டம் அவர்களை சேர்ந்திருந்தது. அப்போது டெல்லியை நவாப்கள் ஆண்ட காலம் அல்லவா?. அரசனுக்கு தன் மக்களின் இந்த ஹிந்து சமய கூட்டமோ பக்தி பரவசமோ விருப்பமளிக்க வில்லை. ஹிந்து சமயம் அப்படி ஒன்றும் உண்மையானதல்ல என்று எண்ணம். நவாபின் அதிகாரி ஒருவன் ஒரு திட்டத்தோடு இந்த கூட்டத்திற்கு வந்தான். சும்மா வரவில்லை. கூடவே ஒரு பசு. அவன் ஞானேஸ்வர் நாமதேவரை அணுகி "நான் இந்த பசுவை இப்போது உங்கள் முன் கொல்லப்போகிறேன். உங்கள் பசு நேசன் கிருஷ்ணன் இருப்பது உண்மையென்றால் அவனால் இந்தபசுவுக்கு உயிர் கொடுக்க முடியுமா?"
"அய்யா, விட்டலன் இந்த பசுவை காப்பான்."
"எப்போது?"
"மூன்றே நாளில் இறந்த அந்த பசு உயிர் பெறும்"

பசு வெட்டப்பட்டது. நவாபின் ஆளுக்கு மிக்க சந்தோஷம். நாம்தேவ் ஞாநேஸ்வரின் பக்தர்கள் பசுவுக்கு உயிர் கிடைக்காதென்று தெரிந்தால் அவர்களை விட்டு விலகிவிடுவார்கள் அல்லவா? அவர்களது பக்த கோஷ்டி கலைந்து விடுமல்லவா? அந்த மூன்று நாளும் அன்ன ஆகாரமின்றி நாமதேவர் ஞானேஸ்வர் மற்றும் பக்தர்கள் அனைவரும் விட்டலனை துதித்து நாம சங்கீர்த்தனம் செய்தனர்.

"விட்டலா, நானல்லவோ அந்த பசுவின் மரணத்துக்கு காரணம்" என்று கதறினார் நாமதேவர். மயங்கி விழுந்தார்.
"நாம்தேவ், எழுந்திருங்கள் அந்த பசுவை போய் பார்க்கவில்லையா?"
பசு எழுந்து அருகில் புல் மேய்ந்து கொண்டிருந்தது.
"ஏன் மூன்று நாள் எங்களை அலைக்கழித்தாய் விட்டலா? வெட்டிய மறுகணமே உயிர் தந்து இருக்கலாமல்லவா?"
"நாமதேவா, என்மேல் ஏன் பழி போடுகிறாய்?. நீயல்லவோ 3 நாள் அவகாசம் கேட்டவன். உன் வாக்கு பொய்க்க கூடாதே என்று தான் நான் காக்க வேண்டியதாயிற்று!"

இந்த அதிசயத்துக்கு பின் நவாபின் இந்த பசு வெட்டிய கைங்கர்யத்தால் பல லக்ஷம் பக்தர்கள் நாம சங்கீர்த்தனத்தில் ஈடு பட்டு வீடு தோறும் பஜனைகள் நாமாவளிகள் பெருகியதே!! கூட்டம் வெள்ளமாக பெருகி, டெல்லியிலிருந்து மார்வார் வழியாக பண்டரிபுரம் திரும்பினார்கள். ராஜஸ்தான் பாலைவன பகுதியில் நீரற்று அவர்கள் அனைவரும் கடும் வெய்யிலில் வாடி களைத்து துவண்ட போது " விட்டலா இந்த பக்தர் கூட்டம் படும் துன்பத்தை பார்த்தாயா?. ஆபத்பாந்தவா வந்து உதவேன்!”
நாமதேவரின் வேண்டுதல் விட்டலன் காதில் விழுந்ததா? இது அடுத்த கதையில் அல்லவோ தெரியவேண்டும்!!



                                         The writer can be reached at: jksivan@gmail.com

 
Krishna Is the Original Form of God



Lord Krishna is the sustainer of the gopis. Around five thousand years ago, the Lord personally advented on this planet and spent His childhood in Vrindavana, a town in India. There are three primary forms of God which are interchangeable: Krishna, Narayana, and Vishnu.

They are the same one and only God, above any other demigod, but according to the Shrimad Bhagavatam and other major Vedic texts, Krishna is the original. It is similar to the concept of a single candle lighting many others. All other candles are the same in their potency, but the original candle still stands out. Krishna’s expansions are known as vishnu-tattva.

When Krishna came to earth, it was in His original form, and He came to give protection to His devotees, to kill the demons, and to enact pastimes for future generations to relish in.

***