விட்டலன் கதை 15
கொளுத்தும் வெயிலில் நாமதேவரும் ஞானேஸ்வரும் எண்ணற்ற பக்தர்களும் ராஜஸ்தான் பாலைவனத்தில் நீரின்றி உணவின்றி வாடி வதங்கினாலும், விட்டலனின் நாம சங்கீர்த்தனத்தை நிறுத்தவில்லை. "விட்டலா" என்று மயங்கி விழுந்தார் ஞானேஸ்வர். கண்ணுக் கெட்டிய தூரம் ஒரு வீடோ கிராமமமோ ஒதுங்க நிழலோ தென்படவில்லை. மனித சஞ்சாரமற்ற வெறும் பாலைவனம். "உடனே வாயேன் வந்து எங்களுக்கு ஏதாவது வழிகாட்டேன்?" என்று கெஞ்சினார் ஞானேஸ்வர். ஆனால் நாமதேவர் " கட்டாயம் விட்டலன் வந்து நமக்கு உதவுவான் கவலை வேண்டாம்" என்று நம்பிக்கையை அனைவருக்கும் ஊட்டினார்.
மூல விக்ரக சிவலிங்கம் முன் அமர்ந்து வழக்கமான விட்டல் நாம சங்கீர்த்தனம் தொடங்கினர். அந்த கோவில் பிரதம அர்ச்சகர் காதில் இது நாராசமாக விழுந்திருக்கும் போல இருக்கிறது! எப்படி இவர்களை தடுப்பது என்று யோசித்து "இப்போது இங்கு சிவனுக்கு அர்ச்சனை, அபிஷேகம் எல்லாம் நடைபெற இருக்கிறது. மேலும் இது சிவன் கோயில். இங்கு போய் விஷ்ணுவை போற்றி பாடுகிறீர்களே!" என்றார்.
The writer can be reached at: jksivan@gmail.com
சிவன் கேட்ட விட்டல் பஜனை
by J.K. Sivan
கொளுத்தும் வெயிலில் நாமதேவரும் ஞானேஸ்வரும் எண்ணற்ற பக்தர்களும் ராஜஸ்தான் பாலைவனத்தில் நீரின்றி உணவின்றி வாடி வதங்கினாலும், விட்டலனின் நாம சங்கீர்த்தனத்தை நிறுத்தவில்லை. "விட்டலா" என்று மயங்கி விழுந்தார் ஞானேஸ்வர். கண்ணுக் கெட்டிய தூரம் ஒரு வீடோ கிராமமமோ ஒதுங்க நிழலோ தென்படவில்லை. மனித சஞ்சாரமற்ற வெறும் பாலைவனம். "உடனே வாயேன் வந்து எங்களுக்கு ஏதாவது வழிகாட்டேன்?" என்று கெஞ்சினார் ஞானேஸ்வர். ஆனால் நாமதேவர் " கட்டாயம் விட்டலன் வந்து நமக்கு உதவுவான் கவலை வேண்டாம்" என்று நம்பிக்கையை அனைவருக்கும் ஊட்டினார்.
விட்டலன் வரவில்லை ஆனால் அவனது சுதர்சன சக்ரம் வந்து விட்டது! பூமியை குடைந்து அமுதெனும் இனிய குளிர்ந்த நீரூற்று அவர்களுக்கு கிடைக்க வழி செய்து மறைந்தது. சமய சஞ்சீவியாக வந்து உதவிய சுதர்சன சக்ரத்தை போற்றி பாடி அனைவரும் தாகம் தீர்ந்து களைப்பு நீங்கி புத்துணர்ச்சியுடன் உத்சாகமாக பயணம் தொடர்ந்தனர். ஒரு சிற்றூர் வந்தது.
அதில் சில பக்தர்கள் உணவு வழங்கி அனைவரும் பண்டரிபுரம் திரும்பினர்.
இதே போல் மற்றொரு யாத்ரையில் நிகழ்ந்த சம்பவம் இங்கு குறிப்பிட்டாகவேண்டும். அன்று சிவராத்திரி. அவர்கள் இருந்ததோ பீகாரில் இப்போது தேவ்கார் என்று அழைக்கப்பட்டு அக்காலத்தில் வைத்யநாதம் என்ற அருமையான பெயருடன் விளங்கிய ஒரு க்ஷேத்ரம். இதன் பெருமை உங்களுக்கு தெரியுமே! 12 ஜோதிர் லிங்கத்தில் இந்த ஊர் லிங்கமும் ஒன்று. ஞானேஸ்வர் நாமதேவர் கோஷ்டி இந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடுவார்களா? மூல விக்ரக சிவலிங்கம் முன் அமர்ந்து வழக்கமான விட்டல் நாம சங்கீர்த்தனம் தொடங்கினர். அந்த கோவில் பிரதம அர்ச்சகர் காதில் இது நாராசமாக விழுந்திருக்கும் போல இருக்கிறது! எப்படி இவர்களை தடுப்பது என்று யோசித்து "இப்போது இங்கு சிவனுக்கு அர்ச்சனை, அபிஷேகம் எல்லாம் நடைபெற இருக்கிறது. மேலும் இது சிவன் கோயில். இங்கு போய் விஷ்ணுவை போற்றி பாடுகிறீர்களே!" என்றார்.
"சுவாமி, க்ஷமிக்கணும். சிவபெருமான் எங்களை ஆக்னையிட்டு தான் அவர் முன் நாங்கள் நாம சங்கீர்த்தனம் செய்கிறோம். அவர் வேண்டாமென்றால் அடுத்த கணம் நாங்கள் நிறுத்தி
விடுகிறோம்" என்று ஞானேஸ்வர் பதிலளித்தார். இது ஒரு பிரச்னையாகி விடக்கூடதே என்று ஆலய நிர்வாகிகள் குறுக்கிட்டு மூல விக்ரஹமான சிவன் சந்நிதிக்கு பின்புறம் ஒரு இடம் ஒதுக்கி அவர்களை அங்கு நாமசங்கீர்த்தனம் செய்ய அனுமதித்தனர்.
பஜனை கோஷ்டி அங்கு அமர்ந்து தொடர்ந்தது. அர்த்த ஜாம கால பூஜைஎல்லாம் முடிந்து கோயில் நடை சார்த்தப்பட்டது. வெளியே பிரகாரத்தில் சிவராத்ரி இரவு பூரா நாம சங்கீர்த்தனம் பஜனை தொடர்ந்து கொண்டே இருந்தது. விடியற் காலை மறுநாள் அர்ச்சகரும் மற்றோரும் ஆலயம் திறந்து பூஜைகளை ஆரம்பிக்க சிவபெருமான் சந்நிதி கதவை திறந்தபோது அதிர்ச்சி அடைந்தனர்.
ஜோதிர் லிங்கம் பின் பக்கமாக திரும்பி காட்சி யளித்தது. சந்நிதி சுவருக்கு பின் பக்கம் தானே நாமதேவர் ஞானேஸ்வர் பக்த பாகவத சிரோமணிகள் அமர்ந்து சிவராத்திரி இரவு பூரா நாம சங்கீர்த்தனம் ஜோராக நடந்துகொண்டிருந்தது! தங்கள் தவறை உணர்ந்தனர் அர்ச்சகரும் மற்றோரும். அவர்களது விட்டலன் நாம சங்கீர்த்தனம் தனக்கு உகந்ததே என்று உணர்த்தவே சிவன் திரும்பினான் என்று புரிந்து கண்ணீர் மல்க ஓடி நாமதேவர் ஞானேஸ்வர் கால்களில் விழுந்து மன்னித்தருள வேண்டினர்.
The writer can be reached at: jksivan@gmail.com
கடவுள் ஒருவரே! நாம் கடவுளின் பிள்ளைகள். வேறு எந்த பாகு பாடும் கூடாது. இதனால் தான் நாட்டில் இத்தனை பிரச்சனைகள். மனிதனாக ஒன்று படுவோம்.வேறு பாட்டை களைவோம். எத்தனை சொல்லி கொடுத்தாலும், எத்தனை பாடம் எடுத்தாலும் நடக்காது. ஒரு சில நாளில் மறந்து போகும். தவம் செய்து நம்மில் இருக்கும் பாவ மூட்டையை அழித்து வாழ்வில் சந்தோசமாக இருப்போம். மற்றவரை சந்தோஷ படுத்துவோம்.
ReplyDeleteநான் சொல்ல போகும் தகவல் அணைத்தும் சித்தர்கள் ஞானிகள் சொன்ன ஞான விளக்கம் பற்றியது. எப்படி வாழ்க்கையை நல்ல படியாக வாழ்வது என்று சொன்னது
ஞானம் என்பது பரிபூரண அறிவு. அது நம்மை அறிந்த பிறகே நடக்கும். நாம் என்பது இந்த உடலோ மனமோ கிடையாது. நான் என்பது உயிர். இதை அனுபமாக இல்லாமல் இருக்கிறது.இதை அநுபவம் ஆக்க வேண்டும். இதை எல்லா ஞானிகளும் சொல்லி சென்று உள்ளனர்.
இதுவரை நாம் மற்றவரிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்று கொண்டோம். சாம்பார் அம்மாவிடம், .... இந்த புதிய பாடத்தை கற்று கொள்ள ஒருவர் தேவை. அவர் தான் குரு. ஞான சற்குரு.
தவம் செய்ய வேண்டும்!!!
தவம் செய்ய நாம் காட்டுக்கு போக வேண்டியதில்லை! குடும்பத்தை விட்டு ஓட வேண்டியதில்லை! காவி உடுத்து தாடி முடி வளர்த்து உருத்திராட்சம் அணிந்து உலகம் சுற்ற வேண்டியதில்லை! நமது உடலை வெறுத்து வருத்தாது துன்புருத்தாது இருக்க வேண்டும்! உணவை வெறுத்து இலை உணவாக வேண்டாம்! கடுமையான ஜப தாபங்கள் வேண்டாம்! சுருக்கமாக கூறுவதனால் ஒன்றும் செய்ய வேண்டாம்! சும்மா இருந்தாலே போதும்! திருமணம் ஞானம் பெற ஒரு தடையல்ல!
தவம் எப்படி செய்ய வேண்டும்? தவம் என்றால் மந்திர ஜபமல்ல! தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்ப்பதோ அல்ல! தவம் என்றால் பிராணாயாமமோ வாசி யோகமோ இன்னபிற யோகங்களோ அல்ல! தவம் என்றால் உடலை வருத்தி செய்யும் எந்த செயலுமல்ல! தவம் என்றால், நான் யார்? என அறிய உணர மெய்ஞ்ஞான சற்குருவிடம் ஞானதானம் பெற்று கேட்டதை உணர்ந்து அறிய சும்மா இருந்து செய்யும் பயிற்சியே! முயற்சியே!
நான் உங்களுக்கு புத்தகம் கொடுக்க ஆவல். எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை.அதனால் இண்டநெட் இல் அனுப்புகிறேன்.
இதை தான் ஞானிகளும் சித்தர்களும் செய்து வந்தனர். இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். இதை ரகசியம் என்று நிறய பேர் சொல்லி தருவது இல்லை.
திரு அருட்பிரகாஷ வள்ளலார் அவர்கள் அருளால் எல்லாம் வெளியே சொல்லி கொண்டு இருக்கிறோம்.
உலகில் பிறந்து ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் நல்ல படியாக வாழவேண்டும். அதற்க்கு முதலில் நான் யார் என்பதை அனுபவமாக தெரிந்து கொள்ள வேண்டும்.
அப்படி தெரிந்து கொள்ள தவம் செய்ய வேண்டும். தவம் என்பது சும்மா இருப்பது. மனதை பயன்படுத்தி செய்யும் எந்த செயலும் அல்ல.
இறைவன் அருள் வேண்டும் என்றால் சுத்த சைவ உணவு கொண்டு வாழ வேண்டும்.
அனைவருக்கும் சொல்லி கொடுங்க. நன்றி.
லிங்க்ஐ படியுங்க.
http://tamil.vallalyaar.com/?page_id=80
blogs
sagakalvi.blogspot.com
kanmanimaalai.blogspot.in
video
ஞானிகள் ஏன் கோயிலை உருவாக்க வேண்டும்?
http://www.youtube.com/watch?v=dLIBK-eptxg
Wonderful. I think your life has taken shape now only, getting enlightened and making enlightened others as well. Please continue this service. This one may be unfit to praise you. But a fullmoon is a full moon whether an illiterate sees it or a literate sees it. Hence took the liberty of paying encomium to your noble service yesses Bee Sir.
ReplyDelete