Translate

Thursday, 7 March 2013

All that matters is Krishna's satisfaction 


For Gopis, it is Krishna's satisfaction is all that matters

 
The more that we are willing to go through hell for Krishna, the more Krishna sees that we truly love Him and the more we become blessed with transcendental happiness. This is very nicely illustrated by one of Krishna's pastimes.

One time Krishna pretended that He had a headache. Many physicians came to cure Him, but still His "headache" persisted. Finally He said, "No physician has been able to cure me. But if my devotee can give me the dust of his feet on my head, then I can be cured."
 
So a messenger began approaching all of the devotees asking that them to give their foot dust to cure Krishna's headache. But nobody wanted to give. They were thinking, "If I give the dust of my feet for Krishna's head, I will go to hell." Even when Narada Muni was approached he said, "How it is possible that I shall give the dust of my feet to Krishna? No, no, no, it is not possible."

Then Krishna asked His messenger "Go to Vrindavana and ask the gopis if they can give their foot dust. They are My best friends. See if they are prepared to give some foot dust. I am very much suffering from headache."
 
Even though nobody else was prepared to give, as soon as the gopis were approached they thought, "Oh no, my beloved Krishna is sick! Food dust is needed to cure His headache?" They immediately told the messenger, "Please take. Please take."
 
In amazement the messenger asked them, "Aren't you afraid that by giving your foot dust to Krishna that you will go to hell?" The gopis replied, "We do not care if we go to hell by offering our dust of feet on the head of Krishna. Never mind if we shall go to hell. Let Krishna be happy. That's all. Krishna will be happy."
 
This is the mood of the gopis. It doesn't matter to the gopis if they have to go to hell or even the whole world has to go to hell. For them Krishna's satisfaction is all that matters. This mood of service to Krishna is called uttama bhakti, the topmost level of spiritual perfection known as pure devotional service.

***

Tuesday, 5 March 2013

விட்டலன் கதை 27
 
வா என்னிடம்
by J.K. Sivan
 
Sant Shri Kanhopatra

விட்டல பக்தர்களைப் பற்றி நாம் அறியும்போது எப்படிப்பட்டவர்களை எல்லாம் அவன் கவர்ந்திருக்கிறான் என்று புரிகிறதல்லவா? பணமோ, பிறப்போ, வயதோ, ஆணோ,பெண்ணோ, படித்தவனோ, ஞான சூன்யமோ, விட்டலனுக்கு தேவை அவர்களது உண்மையான உள்ளன்பு ஒன்றே. அதுவே அவனை நெருங்க செய்கிறது. இன்றைய கதையில் ஒரு சோகம் கலந்த பக்தி வெளிப்படும்.

பண்டரிபுரத்திலிருந்து நடக்க முடியாத தூரத்தில் ஒரு கிராமம், மங்கலவேடா என்ற பெயரோடு.அதில் ஒரு பெண்மணி கூத்தாடியாக நல்ல பெயரில்லாமல் வாழ்ந்தாலும் அவளுக்கு ஒரு அபூர்வமான பரிசு அவள் பெண் கநோபாத்ரா. கநோபாத்ரா கிளியோபாத்ராவுக்கு அழகில் சளைத்தவள் இல்லை.
 
அம்மாவுக்கு தன் பெண் மிக அழகாக உள்ளதில் பெருமை ஒரு பக்கம். நிறைய அவளை வைத்து சம்பாதிக்கலாமே என்று எண்ணம் ஒரு பக்கம். அந்த ஊர் ராஜாவிடம் அவளை அழைத்துப் போய் ஆடிப் பாட வைத்தால் கை நிறைய சன்மானம் கிடைக்குமே என்ற ஆசை அவளை உந்தித் தள்ள பெண்ணை வா, ராஜா அரண்மனைக்கு போகலாம் என்று நச்சரித்தாள். கநோபத்ராவுக்கோ தான் அழகானவள். ஈடிணை இல்லாத தனக்கு ஜோடியாக ஒரு அழகானவனே கணவனாக வரவேண்டும் என்று தீர்மானம். ராஜா தன் அழகில் மயங்கி அந்தப்புரத்தில் நூறோடு நூத்தி ஒண்ணாகத் தள்ளிவிடுவானே என்று பயந்து அம்மாவின் ஆசையை நிராகரித்து வந்தாள்..

ஒரு நாள் அவள் வீட்டு வாசல் தெருவில் பாண்டுரங்க பக்தர்கள் சிலர் கூட்டமாக பஜனை பண்ணிக்கொண்டு செல்வதைப் பார்த்தாள். அவர்களுக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு எங்கே போகிறீர்கள் என்று கேட்டாள்.
"பண்டரிபுரம், விட்டலனைப் போய் தரிசிக்க"
"விட்டலன் யார்? அப்படி என்ன அவரிடம் உங்களுக்கு ஈர்ப்பு?"
"விட்டலன் மகிமை, பெருமை, கம்பீரம், அழகு இதெல்லாம் சொல்லி மாளாது பெண்ணே!. நீயே பார்த்தால் தான் புரிந்து கொள்ளமுடியும். ஆயிரம் மகாலட்சுமி அழகு கொண்டவன் அவன்."
"நான் அவரைப் பார்க்க ஒத்துகொள்வாரா?. நீங்கள் அழைத்து செல்வீர்களா என்னை?"
"உனக்கு விட்டலனைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமிருந்தாலே போரும். உன்னை சந்தோஷமாக வரவேற்பார்"

கநோபத்ராவுக்கு இருப்புக் கொள்ளுமா? அடித்துப் பிடித்து, அம்மாவிடம் அடம் பிடித்து, கையில் ஒரு வீணையுடன் அவர்களோடு பண்டரிபுரம் கிளம்பிவிட்டாள். பண்டரிபுரம் போன கநோபத்ரா பேரை, ஊரை, உலகை எல்லாம் மறந்தாள். விட்டலனின் பேரழகில் தன்னை இழந்தாள். இவன் எனக்கே என்று கொண்டாள். வன் அழகை, பெருமையைப் பாடினாள், ஆடினாள். கோவிலே இருப்பிடமாகக் கொண்டாள்.

ஒருநாள் பண்டரிபுரம் ஆலயத்துக்கு சுல்தானின் மந்திரி ஒருவன் வந்தான்.கநோபாத்ராவின் அருமையை, பெருமையை அழகை எல்லாம் ஊருக்குத் திரும்பி சுல்தான் காதில் போட்டான். சுல்தானுக்கோ அவளது பேரழகு பற்றிய விஷயம் மட்டுமே காதில் ஏறியதால் ஆளை அனுப்பி அவளை அழைத்துக்கொண்டு வர உத்தரவிட்டான். சுல்தானின் வீரர்கள் பண்டரிபுரம் வந்தனர். தடுத்தவரைக் காயப்படுத்தி கநோபத்ராவை பிடித்து விட்டனர். அவள் எவ்வளவோ முயன்றும் அவர்கள் பிடியிலிருந்து மீள முடியவில்லை.
 
விட்டலா, உன்னை விட்டு என்னால் பிரியமுடியாது. நான் உன்னை சேர்ந்தவள். மற்றொருவன் என்னைத் தொட விட மாட்டேன்" என கதறினாள் . அவளைக் கட்டி, தூக்கி பல்லக்கில் போட்டுகொண்டு கிளம்பின வீரர்களைக் கெஞ்சினாள். உஹூம். பயனில்லை. விட்டலனை நினைத்ததும் அவன் அவளிடம் ஏதோ சொல்லியது மாதிரித் தோன்றியது. சிரித்தாள்.

"அய்யா, இனி நான் பிடிவாதம் பிடிக்க மாட்டேன். உங்கள் சுல்தானிடம் உங்களோடு சமத்தாக வருகிறேன். ஆனால் ஒரே ஒரு தரம், ஒரு தடவை மட்டும், பண்டரிபுரம் கோவிலுக்குள் சென்று பாண்டுரங்கனை தரிசனம் பண்ணி விட்டு வருகிறேனே" என்று மன்றாடினாள். காவலர் தலைவன் மனம் இளகி

"சரி, பெண்ணே, சீக்கிரமாக வா என்று கட்டவிழ்த்து விட்டான். பல்லக்கிலிருந்து குதித்து விர்ரென்று பறந்த அம்பு விட்டலனின் மார்பில் பட்டது. ஆம், கநோபாத்ரா விட்டலனைஅணைத்துக் கொண்டாள். கண்ணீரால் குளிப்பாட்டினாள்.

"இனிஎன்னைஉன்னிடமிருந்து பிரிக்காதே.நான் தாங்கமாட்டேன்என்றாள்.
"ஆம், நானும் உன்னைப் பிரியமுடியாது. வா, என்னிடம். என்னில் கலந்துவிடு.
என்னை உனக்கே தந்தேன்என்றாள் கநோபாத்ரா.


என்னில் நீ கலந்தாய்என்றான் விட்டலன். விட்டலனின் வாக்கு நிறைவேறியது.

கநோபத்ராவின் உடல் அவனை அணைத்தவாறே இருக்க அவள் உயிர் விட்டலனாகியது. விட்டலன் ஆணைப்படி அவள் உடல் ஆலயத்தினருகே புதைக்கப்பட்டது.

விடோபாவின் ஆலயத்தில் அவள் வ்ருக்ஷமாக இன்றும் இருக்கிறாள் நாம் சென்று வணங்கிட.


The writer can be reached at: jksivan@gmail.com 


 
Krishna Is the Cause of
All Creation and Destruction



Sage Markandeya saw the child on the banyan leaf inhaling the whole universe and then expelling it. However, he was bewildered by that form, because though it had the form of infant Krishna, it also carried out the functions of creation and destruction of the universe.

He was later told by Brahma that the form was functioning as the Supersoul of all jivas, the master of the universe. Markandeya understood from Brahma that Krishna was the source of all things in the universe.

***
Krishna is the origin of all



In Brahma-samhita it is clearly stated:

Isvarah paramah Krishna, sac-cid-ananda vigraha
anadir adir govindah sarva karana karanam

Krishna, who is known as Govinda, is the Supreme Godhead. He has an eternal blissful spiritual body. He is the origin of all. He has no other origin and He is the prime cause of all causes.

Parama and isvara describe Krishna, indicating that He is not dependent on any one else. What is His composition? He is sac-cid-ananda vigraha. He has a form which is knowledge and bliss.

The word Govinda indicates his pastime of herding the cows, which does not indicate some low occupation. Sacrifice cows with the cows. The devatas arise from the cows.

Anadir means one who is not accepted to be anyone's control.

Sarva karana karanam means He is the cause, the ruler of causes, who has no rule over him.

***

Sunday, 3 March 2013

Become a Krishna Devotee and
Become a Top Most Yogi



There is a sure pathway that leads us out of this miserable material world. That path is called the yoga pathway. It is compared to a ladder. Each rung on the yoga ladder represents a different type of yoga, and this ladder takes us gradually step by step further and further from away from gross ignorance and misery and closer to the topmost perfection of yoga, pure love for the Supreme Person, the source of all existence.

However, to complete each step of the yoga path gradually perfecting each type of yoga takes many, many lifetimes.

Therefore those who understand the essence of yoga immediately come to the topmost rung of yoga by taking directly to the loving service of the Supreme Person, Sri Krishna, and thus become immediately the topmost of all yogis and escape the cycle of birth and death without delay in one lifetime.

***
விட்டலன் கதை 25

மந்திரக்கல்
by J.K. Sivan



நாமதேவர் வாழ்ந்த காலத்தில் ஒரு பாகவதர் பண்டரிபுரத்தில் அதே தெருவில் வசித்தவர். அவரோடு ஒன்றாகப் பாடம் கற்றவர் என்றும் கொள்ளலாம். மந்திரசக்தி பாகவதர் என்று அனைவரும் அழைக்கக் காரணம், இதன் ரகசியம், அவரிடம் ஒரு மந்திரக்கல் இருந்ததுதான்.
ஆரம்ப காலத்தில் பாகவதர், நாமதேவரோடு சேர்ந்து விட்டலன் பஜனை பண்ணியவர் தான். ஏனோ அவருக்கு அது தொடர்ந்து நடக்க மனம் இல்லை. விட்டலன் ஒன்றும் பெரிசாக தூக்கிக் கொடுக்கவில்லையே! இதற்குப் பதிலாக லக்ஷ்மியை பூஜித்தால் குபேர சம்பத்து கிடைக்குமே என்று எண்ணம் தோன்றியதால் கடும் விரதம், உபாசனை, மந்த்ரோச்சாடனம், பூஜையெல்லாம் பண்ணி லக்ஷ்மியை மனம் கனிய வைத்து, ஒரு மந்திரக்கல் சம்பாதித்துக்கொண்டார்.

அந்த வினோத சக்தி கல்லின் மூலம் கண்ணில் கண்ட இரும்புப் பொருள்களையெல்லாம் தொட்டு தங்கமாக்கிக்கொண்டார். வீட்டில் இரும்பு தீர்ந்துபோய் தெருவெல்லாம் கிடக்கும் ஆணி, கம்பியெல்லாம் எடுத்து வந்து அவை தங்கமாகியது!
இதனால் பாகவதருக்கு விட்டலன் பஜனையில் ஈடுபாடு இருக்குமா? மாதக்கணக்கில் பஜனையில் கலந்து கொள்வதில்லை. நாமதேவருக்கு ரொம்ப வருத்தம் ஏன் இவர் இவ்வாறு மாறிவிட்டார் என்று. விட்டலா இதுவும் உன் சித்தமாஎன்று எடுத்துக்கொண்டார்.

நாமதேவர் மனைவி ராஜாய், பாகவதர் மனைவிக்கு நெருங்கிய நண்பி. இருவரும் ஒன்றாகவே காலையில் சந்திரபாகா நதிக்கு சென்று ஸ்நானம் செய்து நீர்மொண்டு வீட்டுக்கு திரும்புவார்கள். உலகத்தில் எல்லா விஷயங்களும் அப்போது பேசப்படும்.

"என்னடி கொஞ்சநாளா ரொம்ப மினுமினுன்னு இருக்கே. புது புடவையா கட்டிகிறே. பளபளன்னு புதுசு புதுசா நகையெல்லாம் உன் கழுத்திலே? எப்பிடி இதெல்லாம்?”

“உன்கிட்ட சொல்றதுக்கென்ன? ஆனா மூணாம்பேருக்கு தெரியாம வச்சுக்கோ. அந்த மனுஷன் இப்பல்லாம் பாண்டுரங்கனை விட்டுட்டு லக்ஷ்மி, குபேரன்னு நிறைய பூஜை, மந்திர தந்திரமெல்லாம் பண்ணி இரும்பை தங்கமாக்கிற ஒரு கல்லைப் புடிச்சிண்டு வந்திருக்கார். அதை தனியா தொட்டு, தொட்டு பூஜை பண்ணி ஒரு பேழையில் போட்டு பூஜையிலே வச்சிருக்காரோல்லியோ. அந்தக் கல்லாலே இரும்பைத் தொட்டாலே தங்கமாறது. அடி அம்மா, இதை யார் கிட்டயும் சொல்லிடாதேடி!

உனக்கு நாமதேவரைப் பத்தி தெரியுமில்லையா. வீட்டிலே தரித்திரம் பிடுங்கி திங்கறது. காசே சம்பாதிக்காம எப்பப் பார்த்தாலும் பஜனை, பஜனை என்று விட்டலன் ஸ்மரணை தான். நானும் அம்மாவும் தான் தினமும் யார் கிட்டயாவது யாசகம் பண்ணி பிட்ஷை நடக்கிறது. ஒரே ஒருநாள் எனக்கு அந்தக் கல்லைக் கொடேன். நிறைய துருபிடிச்ச ஆணியா வீட்டுலே நிறைய இருக்கே! எதாவது கொஞ்சம் தங்கமா பண்ணினா என் தரித்திரம் விடியாதா சொல்லு?"

ராஜாய் கல் பெற்றாள். நிறைய ஊசிகளும், இரும்புத் துண்டுகளும் தங்கமாயின. கொஞ்சம் சீக்ரமாகவே வீடு வந்த நாமதேவர் அவள் இரும்பைத் தங்கமாக்குவதைக் கவனித்துப் பதறினார். விவரங்களை கேட்டுப் புரிந்து கொண்டார். பண ஆசை தன் மனைவியையும், பாகவதரைப்போலவே மாற்றுவதை அறிந்து வாடினார். என்ன தோன்றியதோ விட்டலாஎன்று கத்திக்கொண்டே அந்த மந்திரக்கல்லைப் பிடுங்கி எடுத்துக்கொண்டு ஓடினார். சந்திரபாகா நதியில் ஆழத்தில் எங்கோ அது விழுந்து மறைந்தது. அமைதியாக வீடு திரும்பினார்.

ராஜாய், பாகவதர் மனைவியைச் சந்திக்கவில்லை. பயம். மறுநாள் வழக்கம் போல பாகவதர் பூஜைக்கு உட்கார்ந்தார், பேழையைக் கண்ணில் ஒற்றிக்கொண்டு லக்ஷ்மியைப் பிரார்த்தித்து, திறந்தார் உள்ளே கல் இல்லை. ஷாக் அடித்து எங்கும் தேடி காணாமல், மனைவியை விசாரித்து உண்மை தெரிந்து கொண்டார் நெருப்பாக அவளைச் சுட்டார்.

நாமதேவர் வீட்டுக்கு வந்து எங்கே என்னுடைய மந்திரக்கல்.கொடு உடனேஎன்றார். அவரை அமைதிப்படுத்தி பகவான் மீது செய்யும் பஜனையின் புண்ய பலனையெல்லாம் எடுத்துக் கூறி நாமதேவர் அவரை மீண்டும் சேர்ந்து கொள்ளச் சொன்னார். அதை கேட்கும் நிலையில் பாகவதர் இல்லையே!

வானுக்கும் பூமிக்குமாகக் குதித்து, “கொண்டுவா என் கல்லைஎன்று நச்சரிக்கவே அது சந்திரபாகா நதியில் போடப்பட்டதை நாமதேவர் சொன்னதும் ஓடினார் நதிக்கு. வெள்ளமாக ஓடும் நதியில் கல்லை எங்கே தேடுவது? "என் கல், என் கல்! அதை இப்போதே தா என்று பித்துப் பிடிக்காத குறையாகக் கத்தினார் பாகவதர். நாமதேவரையும் ஏன் விட்டலனையுமே வாய்க்கு வந்தபடியெல்லாம் தாழ்வாக ஏசினார்.

நாமதேவர் தன்னை யார் என்ன சொன்னாலும் பொருத்துகொள்வார் விட்டலனை காது கேட்க விமர்சிக்க விடுவாரா? விட்டலா! நீதான் நான் செய்த தவறை மன்னித்து இந்த மனிதரின் கல் மீண்டும் கிடைக்க அருள் புரியவேண்டும். என் வார்த்தைகள் அவர் செவியில் ஏறவில்லை. என்னால் உன்னையுமல்லவா புண்படுத்துகிறார்!"

கண்களை மூடி ஒருகணம் விட்டலனை உள்ளன்புடன் நினைத்து "பாகவதரே வாருங்கள் என்று அவர் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு நதிக்குச் சென்றார். நதியில் இறங்கினார். மூழ்கி கைக்குக் கிடைத்த கல்லெல்லாம் எடுத்து மேலே வந்தார். இந்தாருங்கள் அய்யா உங்கள் கல்" என்றார். கை நிறைய பெரிய பெரிய மந்திரக் கற்கள். நாமதேவர் சக்தியை, பாண்டுரங்கன் மகிமையை, இமைக்கும் நேரத்தில் புரிந்துகொண்டார் பாகவதர். கற்களை வாங்கி வீசினார் நதியில். காலடியில் விழுந்தார்.

மீண்டும் விட்டலனின் ஆலயத்தில், நாமதேவரோடு பாகவதர் குரலும் மறுபடியும் பஜனையில் கர்ணாம்ருதமாக ஒலித்ததைக் கேட்டவரெல்லாம் புகழ்ந்தனர்.



The writer can be reached at: jksivan@gmail.com 
Prabhupada's Dream Becoming a Reality 
Temple of the Vedic Planetarium coming up in Mayapur, West Bengal, India

In the beginning days of the Mayapur project back in the 1970s all ISKCON had
on this property was one small grass hut. Soon a small temple building, a
kitchen, and a residential quarters followed.

Now there is an entire city
emerging. But the perfection
of the Mayapur project will
be the completion of the
Temple of the Vedic
Planetarium, scheduled to be
completed in 2016. This will be the fulfilment of Srila Prabhupada's order he first
gave his disciples back in the 1960s that such a temple should be constructed in
Mayapur, the birth place of Shri Chaitanya Mahaprabhu.