Butter Thieves |
அந்த கருப்பு பயல் துரு துரு வென்று இருப்பவன்.ஒரு இடத்தில் நிற்காமல் அலைபவன். அவனுக்கு என்று ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். அத்தனை பேரும் சாமான்யமானவர்கள் அல்ல. கண் பார்த்ததை கை எடுக்கும்.
இவர்கள் அனைவருக்கும் லீடர் அந்த கருப்பு பயல். ஐந்திலிருந்து எட்டுக்குள் தாண்டாத வயசு அனைவருக்கும். சாதுவாக இருப்பவனையும் தயார் செய்து விடுவான் அந்த கருப்பு பயல். ஒரு வீடு பாக்கியில்லாமல் அந்த தெரு அதற்கடுத்த தெரு எதிர் தெரு அதன் பின்னால், என்று அந்த சிறிய கிராமத்தின் அனைத்துதெருவுக்கும் செல்வார்கள். எதற்கு? வீட்டில் கொஞ்சம் அசந்து இருக்கும் சமயம் பார்த்து அந்தந்த வீட்டில் சேமித்து வைத்திருக்கும் வெண்ணையை அபேஸ் செய்ய. ஒரு தடவை இரண்டு தடவை வேண்டுமானால் கோட்டை விட்டு ஏமாறலாம். விழித்து கொண்ட தாய்மார்கள் இந்த பயல்கள் கைக்கு எட்டாமல் உயரே உத்தரத்தில் ஒரு கயிற்றில் உரி கட்டி அதற்குள் வெண்ணை, பால் சட்டிகளை வைத்து விடுவார்கள். இந்த கும்பலுக்கு இதனால் பெரும் ஏமாற்றம். என்னடா செய்யலாம் என்று யோசித்தார்கள். இருக்கவே இருக்கிறானே தலைவன். அவன் யோசனை கொடுத்தான்.
He Stole Not Only Butter, But Also the Hearts of Devotees |
இதோ வந்துவிட்டார்கள் திமு திமு வென்று. அவன் தாய் யசோதைக்கு புரிந்து விட்டது. அனைவரும் வந்தால் அது அந்த பயல் சம்பத்தப்பட்ட ஒரு கம்ப்ளைன்ட் தானே வழக்கம்போல.
அவன் அவர்களை பார்த்த கணத்திலேயே புரிந்து கொண்டான் நண்பர்கள் போட்டு கொடுத்து விட்டார்கள் என்று. ஒன்றுமறியாதவனாக தன் தாய் பின்னால் சென்று நின்று கொண்டு அவள் கால்களை கட்டிக்கொண்டு நின்றான்.
"வாருங்கள் என்ன விஷயம்" என்றாள் யசோதை
He Distributes the Stolen Butter to All |
கண்கள் சந்தித்தன. என்ன காந்த சக்தியோ? பெரிய வட்ட விழிகள். அவை பேசும் மொழியோ ஏராளம். இன்றெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று தோன்ற வைக்கும் கருவூலம் - அந்த கடலினும் பெரிய கண்கள். மெதுவாக தலையை ஆட்டிக்கொண்டே அந்த விழிகள் அம்மாவின் பின்னால் ஒளிந்து கொண்டே பேசின " ப்ளீஸ் சொல்லாதே, சொல்லாதே" என்று.
"என்னவிஷயம் சொல்லுங்கள் ஏன் எல்லாரும் பேசாமலேயே நிற்கிறீர்கள்? அமருங்கள்" என்றாள் யசோதை.
"ஒன்று மில்லையம்மா. நாம் அடிக்கடி சந்திக்க முடியாமல் வேலை இருக்கிறதே. அதான் எல்லாரும்ஒன்று சேர்ந்து உன்னை பார்த்து விட்டு போவோம் என்று வந்தோம்."
அந்த விழிகள் செய்த மாயம் அல்லவா இது?
"பார்வை ஒன்றே போதுமே!"-ஊத்துக்காடு வேங்கட மகி!!!
பாலை காய்ச்சி அது ஆறினவுடன் சிறிது தயிரோ மோரோ கலந்தவுடன் அது தெளிந்து இறுகி அசைவற்று தயிராகிறது. தயிரை கடைந்தபின் அது வெண்ணை. இது உபமானம். கொந்தளிக்கும் மனதை கொஞ்சம் கொஞ்சமாக உணர்ச்சிகளினின்றும் ஆறவைத்து, அதில் தன்னலமற்ற எண்ணம் புகுத்தி நிலை நிறுத்தினால் மனம் உறுதிபடுகிறது. மனதை நன்றாக அலசி கடைந்து தேவையற்றதை (ஆசை, மோகம், குரோதம், லோபம், மாற்சர்யம்) நீக்கினால் பெறுவது நிர்மலமான தன்னலமற்ற
தூய்மையான மனம். அதுவே இறைவன் ஆசையாக தேடும் வெண்ணை.
The writer can be reched at: jksivan@gmail.com
No comments:
Post a Comment