Translate

Friday 25 January 2013


விட்டலன் கதை 7

புனித யாத்திரை
by J.K. Sivan

பைதான் என்கிற சிற்றூரில் குர்மதாஸ் என்ற உடல் ஊனமுற்றவர் இருந்தார். பிறவியிலிருந்தே அவருக்கு கால் கை கிடையாது. அவருடைய நல்ல காலமோ நேரமோ பாருங்கள் அந்த ஊருக்கு அதுவும் அவர் இருந்த இடத்துக்கு அருகிலேயே ஒரு உபன்யாசகர் வந்து பாண்டுரங்கன் மகிமை பற்றி பேசினார். இப்படிக் கூட நடக்குமா என்ற ஆச்சர்யத்தில் குர்மதாஸ் களித்தார். பாண்டுரங்கனின் லீலைகள், மகிமை, பக்தர்களிடம் கொண்ட பாசம், நேசம் எல்லாம் அவரை காந்தமாக கவர்ந்து இப்போதே புறப்படவேண்டும் பண்டரிபுரம், விட்டலனை பார்த்து விட்டு தான் மறுவேலை என்று எல்லாம் துடிக்க வைத்தது. என்ன பிரயோஜனம்?
எத்தனையோ பேரை கெஞ்சினார் மன்றாடினார். எல்லோரும் " போய்யா காலும் கையும் இருந்துமே போக வழியில்லை. உனக்கு அதுவுமில்லை ஆசை மட்டும் இருக்கு. போய் மூலைலேயே கிட" என்று ஏளனம் தான் மிச்சம். சரி நாமே செல்வோம். என்று மெதுவாக உடலால் நகர ஆரம்பித்தார். "ஹே, விட்டலா, நீயே துணை என்று பயணம் ஆரம்பமாகியது. மணிக்கணக்காக ஊர்ந்து சென்ற களைப்பை ஒரு ஹனுமான் கோயில் நீக்கியது. வழியில் தென்பட்ட அந்த கோயிலில் ஹனுமனை வேண்டினார். ஒருவரும் உதவ எனக்கு இல்லை உன்னை தவிர ஹனுமானே என்று வருந்தி வெளியில் வரும்போது ஒரு வழிப்போக்கன் கண்ணில் தென் பட்டான். இருவரும் சம்பாஷித்தனர்.
"ஏனப்பா, உன்னால் முடியாமல் எங்கு நகர்ந்து போகிறாய்" என்று கேட்பவர் விட்டோபா என்கிற ஒரு வியாபாரி.
"பிரபு, நான் பண்டரிபுரம் சென்று விட்டலனை தரிசிக்க ஆசையோடு கிளம்பிவிட்டேன். இன்னும் எவ்வளோ தூரம் இருக்கிறது?"
"இந்த வேகத்தில் சென்றால் மூன்று நான்கு மாதங்கள் பயணம் ஆகலாம். எதற்கும் அடுத்த ஊர் இன்னும் ரெண்டு மணியில் வரும் அங்கு நான் உங்களுக்காக உணவு தயார் செய்து காத்திருப்பேன். நானும் பண்டரிபுரம் போகிறவன் தான். உங்களுக்கு சரியான வழித்துணை நண்பன் நான்” என்று சிரித்தார் விடோபா.
“நான் எப்படி உங்களுக்கு சரியான வழித்துணை நண்பனாக முடியும் இந்த நிலையில் பிரயாணம் செய்யும்போது?” என வருந்தினார் குர்மதாஸ். அன்று இரவு அந்த ஊரில் வியாபாரி, குர்மதாசுக்கு உணவு, தங்க இடம், படுக்கை வசதிகள் எல்லாம் செய்து தந்தார்.
நன்றி மகராஜ்!”
“குர்மதாஸ், நான் வழிப்போக்கர்கள் பண்டரிபுரம் செல்லும்போது அவர்களுக்கு வேண்டிய உதவி செய்ய ஆவலும் கடமையும் கொண்டவன். என் ஊர் அல்லவா அது?” என்றான் வியாபாரி.

சொன்ன படியே ஒவ்வொரு நாளும் இரவும் அங்கங்கு பயணிகளுக்கு உணவு, உடை தங்க இடம் எல்லாம் வியாபாரியால் ஏற்பாடு செய்யப்பட்டு அவ்வப்போது குர்மதாசரையும் சென்று பார்த்து கவனித்து கொண்டார் வியாபாரி.

உடலால் கல்லிலும் முள்ளிலும் காட்டிலும் மேட்டிலும் ஊர்ந்து மாதக்கணக்கில் செல்வதால் உடல் புண் பட்டு தோல் கிழிந்து ரத்தம் வழிய அவர் பிரயாணம் தொடர்ந்தது, ஒரு நிலையில் மேலே ஒரு அங்குலம் நகரமுடியாது என்ற நிலை வந்தபோது வருவோர் போவோரிடம் " பக்தர்களே பாண்டுரங்கனிடம் என்னால் பிரயாணம் தொடர இயலாததை சொல்லுங்களேன். என் விருப்பம் நிறைவேற வழியே இல்லையா என்று கேளுங்களேன்" என்று சொல்லி அனுப்ப அவர்களும் அதை பண்டரிநாதன் செவியில் போட விட்டலன் தான் மட்டுமல்லாமல் ஞானதேவர், நாமதேவர், சவிதமாலி ஆகியோரோடு குர்மதாஸ் இருந்த பஹூலா என்கிற கிராமத்திலேயே சென்று தரிசனம் தந்தான்.

வியாபாரி விடோபாவாகவே தோன்றிய அவனை கண்டு ஆனந்தித்தார். தன் மீது கொண்ட பக்தியில் களித்த விட்டலன் குர்மதாசை அணைத்து கொண்ட மறுகணமே குர்மதாசின் கை கால்கள் விளங்கின. அவர் காலால் விட்டலனை பிரதட்சிணம் வந்து கையெடுத்து வணங்கினார். உனக்கு என்ன வரம் வேண்டும் சொல் குர்மதாஸ்” என்ற பாண்டுரங்கனிடம் அவர் கேட்டது:

"என் போல் இயலாதவர்கள் உன்னை வணங்க உன் தரிசனம் இங்கே கிட்ட வேண்டும்" என்ற அவர் கோரிக்கையை நிறைவேற்றினான் விட்டலன்.இன்றும் பஹுலா என்கிற க்ஷேத்ரம் பண்டரிபுரத்திற்கு ஈடாக அநேக கோடி பக்தர்களுக்கு பாண்டுரங்கனின் தரிசனத்தை வழங்குகிறது தெரியுமா உங்களுக்கு? ஆடியிலும் கார்த்திகையிலும் பாண்டுரங்க பக்தர்கள் இந்த க்ஷேத்ரத்தில் பொங்கி வழிகிறார்கள்.

 
 
                                                                        The writer can be reached at: jksivan@gmail.com
 

2 comments:

  1. From: JBA [mailto:balaji63@gmail.com]
    Sent: Tuesday, January 22, 2013 4:10 PM
    To: com
    Subject: Fwd: Fw: Thiruvaiyaru Panchanatheeswarar temple kumbabishekam

    Dear Sir,

    How are you? Long time since I personally wrote to you. However, I constantly read all your mails esp. Vittala's which are so moving when it comes to exhibition of bakthi.

    With best regards,
    Balaji J

    ReplyDelete
  2. From: Guru Moorthi [mailto:mayavaramguru@gmail.com]
    Sent: Tuesday, January 22, 2013 7:41 AM
    To: jksivan
    Subject: Re: moral stories paandurangan 7

    குர்மதாசின் வரலாறு மெய்சிலிர்க்க வைக்கிறது... என்ன ஒரு பக்தி...!!! நமஸ்காரம், குரு

    ReplyDelete