Translate

Wednesday 23 January 2013

எங்கே அவன்?
by J.K. Sivan





இது மாதிரி குட்டிகதை எழுத எனக்கு கிடைத்த வாய்ப்பு இறைவனின் கருணை என நான் அக மகிழ்கிறேன் ரோஹிதாசர் என்றொரு அருமையான மனிதர் பண்டரிபுரத்தில் வாழ்ந்து வந்தார்; தாழ்ந்த வகுப்பில் பிறந்து செருப்பு தைக்கும் வேலையில் கிடைக்கும் சிறிய வருமானத்தில் தன்னுடைய குடும்பம் வயிறு கழுவினாலும் இரவும் பகலும் பாண்டுரங்கன் மேல் அளவில்லாத பக்தி கொண்டு அவனை போற்றி பாடுவதிலே தான் பெரும்பகுதி நேரத்தை செலவிட்டவர். ஏகாதசி அன்று அவர் பஜனை நாள் பூரா கோவில் அருகே நடக்கும். அனைவரும் பக்தி ரசத்தில் மூழ்கி அனுபவிப்பார்கள். இதனால் அவரால் ஒரு மாசத்துக்கு 10 ஜோடி செருப்பு தான் பண்ண முடிந்தது. போருமே!.
அந்த ஊர் ராஜாவுக்கு திடீரென்று அடுத்த ஊர் ராஜாவின் மேல் படையெடுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததால் படை வீரர்களுக்கு காலணிவழங்க ஊரிலுள்ள அனைத்து செருப்பு தைக்கும் தொழிலாளிகளிடமும் ஒருமாத காலத்தில் தலா 1000 ஜோடி செருப்பு தைக்க வேண்டும் என்றுஆணையிட்டான். எல்லா தொழிலாளி களும் இரவும் பகலும் உழைக்க கிளம்பிவிட்டார்கள். ரோஹிதாசருக்கு நிச்சயம் தன்னால் 1000 ஜோடிசெருப்பு செய்ய முடியாது என்று தெரியும்.எல்லாம் இறைவன் செயல் என்று வழக்கம் போல்பாண்டுரங்க பஜனையிலே நிறைய நேரம் செலவானது. இன்னும் மூன்று நாள் இருக்கு அதற்குள் 1000ஜோடி செருப்பு ரெடியாக வேண்டும். இல்லையேல் அரசனின் கடும் தண்டனை நிச்சயம். அவர் மனைவி அழுதாள்.
"எப்படியாவது ஏற்பாடு பண்ணுங்களேன்?"
"என்னால் எப்படி அம்மா அவ்வளவையும் பண்ண முடியும்? ரெண்டே நாளில் ஆககூடிய காரியமா இது?
தம்புரா மூலைக்கு போனது. முக்கி முனகி செய்தாலும் 11 ஜோடி கூட தயாராக வில்லை."பாண்டுரங்கா, நீயே வழிகாட்ட வேண்டும்!"
அய்யாஎன்ற தெருவில் ஒரு குரல் கேட்டது.
யாரப்பா?”
இந்த ஊரிலே ரோஹிதாசர் என்பது யார்?”
ஏன்? நான் தான்”.
உங்களுக்கு செருப்பு தைக்க உதவிக்கு ஆள் வேண்டும் என்று கேட்டீர்களாமே
சொல்லியிருந்தேன் பல பேரிடம். ஆனால் இதுவரை ஒருவரும் கிடைக்க வில்லை. இனி கிடைத்தாலும் பிரயோஜனமில்லை நாளை விடிந்தால் அரசனின் ஆட்கள் என்னை இழுத்து போய் தண்டனை கொடுக்க போகிறார்கள். ஆகவே எனக்கு உதவிக்கு இப்போ ஆள் வேண்டாம்"
"இல்லை அய்யா, எனக்கு ஓர் சான்ஸ் கொடுங்கள். இரவோடு இரவாக நான் வேலை செய்கிறேன்"
உன்னால் முடியாதப்பா
அதென்ன அந்த மூலையில்?”
என்னுடைய தம்புரா
நீங்கள் பாடுவீர்களா எனக்கு பாட்டு ரொம்ப பிடிக்கும். நீங்கள் பாடிக்கொண்டே இருங்கள் நான் வேலையை முடித்து விடுகிறேன்
பாடினால் என்னை நான் மறந்து போய்விடுவேன். உனக்கு கொஞ்சம் கூட உதவ முடியாதே தம்பி."
உங்கள் உதவி வேண்டாம். நீங்கள் "நீங்கள் பாடுவீர்களா எனக்கு பாட்டு ரொம்ப பிடிக்கும். நீங்கள் பாடிக்கொண்டே இருங்கள் நான் வேலையை முடித்து விடுகிறேன்"
"தம்பி, ஏகாதசி அன்று நான் கோவிலில் பாடுவது வழக்கம் இன்று இந்த வேலையால் அதை கூட செய்யவில்லை. என் கவலை எனக்கு.”
கோவில் கிட்டே உக்காந்து பாடறதை இங்கே உக்காந்து பாடுங்க நானும் கேட்பேன் இல்லையா."
இரண்டு நாள் போனதே தெரியவில்லை.நாள் பூரா பஜனையில் ஈடுபட்டார் ரோஹிதாசர். பையன் 1000 ஜோடி செருப்பு தயார் செய்து நூறு நூறாக மூட்டை கட்டி வைத்து விட்டான்.
தம்பி, ரொம்ப நன்றிப்பா.என் மானத்தை மட்டுமல்ல என் உயிரையும் காப்பாற்றினாய். ரெண்டு நாளாய் ராப்பகலா உழைச்சே. இந்தா எண்ணெய் சீயக்காய் ஆத்தில் போய் குளிச்சுட்டு வா சாப்பிடுவோம்.”
போனவன் வரவில்லை.
"ஏம்மா, அந்த பய்யன் வரவில்லையே ஏதாவது பேர் ஊர் கேட்டாயா அவனிடம்."
பண்டரிபுரம் தானாம். பேர் பாண்டுவாம்”.
ராஜாவின் ஆட்கள் செருப்பை எல்லாம் தூக்கி போய் கை நிறைய காசு கொடுத்தார்கள். எண்ணையும் காசுமாக தூக்கிக்கொண்டு பையனை எங்கெல்லாமோ தேடி கிடைக்காமல் கோவிலுக்கு சென்றார். தூரத்திலிருந்தே பாண்டுரங்கன் தெரிந்தான்.ஒருகணம் அவன் முகம் அவருக்கு பையன் முகமாக தோன்றி சிரித்தது.





The writer can be reached at: jksivan@gmail.com 

No comments:

Post a Comment