Translate

Friday 21 December 2012


பெற்ற மனம் பித்து
by J.K. Sivan                                                               
 
 
சிலை போல வெகு நேரம் நின்று கொண்டிருந்தார் விஷ்ணு சித்தர். அன்னம் ஆகாரம் எல்லாம் மறந்து விட்டதா வெறுத்து விட்டதா?  அவளில்லையே! இனி அன்னம் எதற்கு, நீர் எதற்கு? வீடு வாசல் இந்தத் தோட்டம் ஏன், என் உடலே எதற்கு? எல்லாம் அவளாகவே இருந்து அவளே இல்லாமல் போன பின் நானே எதற்கு? கண்களில் வழியும் நீர் ஆனந்த கண்ணீரா? இல்லை அளக்க முடியாத சோகக் கண்ணீரா? தெரியவில்லையே. பித்துப் பிடித்து விட்டதே!

இதோ! இந்த துளசிவனத்தில் தானே, ஆடிப் பூரம் அன்று, விடிகாலை என் ரங்கனைப் பாடிக் கொண்டே புஷ்பம் பறிக்க வந்தபோது அந்த சின்னக் குரல் கேட்டேன். ஆச்சர்யமாக, அவளை ஒரு தெய்வ பிம்பமாக, தாயாரின் சிறு வடிவாகப் பார்த்து இதோ இந்த கூடத்தில் இட்டுப் பால் வார்த்தேன். இங்கு தானே ரங்கன் படத்துக்கு முன்னால் அமர்ந்து அவளை மடியில் போட்டுக்கொண்டு அனைவர் மத்தியிலும் அவளுக்கு இரவெல்லாம் யோசித்து பொருத்தமாககோதை” என்று பெயரிட்டேன். இங்குதானே அவள் எப்போதும் என்னோடு அமர்ந்து பேசுவாள். ரங்கன் கதையெல்லாம் திரும்ப திரும்பக் கேட்பாள். வாய் ஓயாமல் நானும் சொல்லிச் சொல்லி மகிழ்வேனே. எப்போதும் இந்த பூக்கூடையை பார்த்துமாலை தயாரா?” என்று கேட்பாளே. ஏன் எதற்கு என்று ரொம்ப காலம் புரியாமலே இருந்து விட்டேனே!. தினமும் கட்டிவைத்த மாலையைத் தன் தோளில் சூட்டிக் கொண்டு இங்கே பின்னால் இருக்கும் கிணற்றில் நீரில் தன் அழகை பார்த்துரங்கா, நான் உனக்கு ஏற்றவளா? உனக்கு பிடிக்கிறதா என்னை?” என்று கேட்பாளாமே. இறைவனின் மனதில் இடம் பிடித்த அவளை ஒன்றும் அறியாதவனாக நான் கோபித்ததே மாபெரும் தவறு. அவள் சூடிக்கொடுத்த மாலை தான் வேண்டும் என்று ரங்கனே அல்லவா உணர்த்தினான் எனக்கு! அவள் அவனுக்காகவே பிறந்தவள். என்னிடம் வளர்வதற்காகவே வந்தவள். நான் பாக்யவானே! அப்பறம் தானே அந்த அழகிய மணவாளனே புரிய வைத்தான்! என்ன குரல், என்னகுரல் அவளுக்கு! எவ்வளவு சூட்டிகை. எவ்வளவு அறிவு! என்னமாய் தமிழ்ப் பாசுரங்கள் எழுதலானாள்! என் பெண் சாதாரண பிறவி அல்ல என்று வாய்க்கு வாய் சொல்வேனே! அவள் பாசுரங்களை நானே எத்தனையோ முறை பாடி மகிழ்ந்தேனே! எல்லாம் அவள் என்னை விட்டுப் பிரிவதற்காகவேவா?”
ச்சே” என்ன எண்ணம் இது! அவள் எங்கு என்னைப் பிரிந்தாள்?. நான் அல்லவோ மேளதாளங்களோடு அரசன் அனுப்பிய பல்லக்கிலே சகல மாலை மரியாதைகளோடு மகாலட்சுமியாக அவளை சீவிச் சிங்காரித்து சீர் வரிசையோடு மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பினேன்! கூடவே போனவனும் கூட!
என்ன அழகு அவளுக்கு, எத்தனை மகிழ்ச்சி முகத்தில்! “இன்னும் எத்தனை தூரம், எவ்வளவு நேரம் இருக்கு ஸ்ரீரங்கத்துக்கு?” என்று கேட்டுக் கொண்டே வந்தாளே! என்ன ஆச்சர்யம், என்ன அதிசயம் என்னை கிள்ளிப் பார்த்துக் கொண்டும் கூட என்னால் நம்ப முடியவில்லையே!”

“இதோ, வந்து விட்டது, ரங்கனின் இடம் இதோ எனக்காக உன்னைக் காக்க வைத்து விட்டேனே. “பல்லக்கை இறக்குங்கள்” என்று அவசர அவசரமாக இறக்கச் சொல்லி தாவிக் குதித்து ரங்கனின் சந்நிதிக்குள் ஓடினாள்.
Sri Andal

எல்லாரும் ரங்கா ரங்கா என்று உணர்ச்சி பொங்கக் கூவினோம். என் கோதை, என் ஆண்டாள், எங்களையெல்லாம் பார்க்கக் கூட நேரமில்லாமல் உள்ளே சென்றாள். ரங்கனை ஆரத்தழுவினாள். பிறகு, பிறகு ...? ரங்கனோடு கலந்து மறைந்தாள்!

இறைவனோடு எங்கள் இறைவி ஒன்றாக கலந்தது துக்கமா? நிச்சயம் இல்லைதான்! ஆனால், ஆனால்,.... அவளை இனி என் கோதையாகப் பார்க்க முடியவில்லையே!” என்ற ஒரு தகப்பனின் பாசக் குமுறல் தான் இது!

***

                                                  
                                               
                                                   The writer can be reached at: jksivan@gmail.com

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. From: Meera Neelakantan [mailto:meeraneela@yahoo.com]
    Sent: Sunday, December 23, 2012 5:47 AM
    To: jksivan
    Subject: Re: help msg



    Hello Mama,

    You may find the following links useful:

    http://support.google.com/blogger/bin/answer.py?hl=en&answer=42472

    http://www.youtube.com/watch?v=GtAd7Ly4j-Q

    http://howto.cnet.com/8301-11310_39-20075489-285/how-to-post-a-blog-feed-to-facebook/

    I know how to post stuff in Forum. I don't know whether the same principle applies for posting in the blog.

    Mama, I like your Krishna stories very much. All of them are very inspiring. I always look forward to your stories everyday. In fact I posted a comment for one of the stories in the blog. All the Krishna pictures in the blog are beautiful. I feel you're spending your time in a very useful way. My mother-in-law is a great devotee of Lord Krishna.
    She has got a statue of Krishna and Radhai (like Golu bommai). She keeps them in her altar always and decorates them beautifully.



    ReplyDelete