Translate

Sunday, 2 December 2012



அதிசயக் குழந்தை
by J.K. Sivan 
“அடியே விசாலாட்சி! இந்த ஆச்சர்யத்தைக் கேள்விப்பட்டியோ?”
“எதைச் சொல்றே நீ, சத்யா, நம்ப யசோதை வீட்டில் நேற்று நடந்ததைப்பத்தி தானே?
"வேறே என்ன விஷயம் இருக்கு பேச??
"ஆமாம். கேள்விபட்டதும் நானும் ஓடினேன் அவ வீட்டுக்கு. ஒரே கூட்டம். முண்டியடிச்சு உள்ளே போய் யசோதையைக் கேட்டேன் அழுதுண்டே சொன்னாள்”
“என்ன?”
யாரோ ஒரு சின்ன அழகான பெண் காலம்பற வந்தாளாம். உங்க வீட்டுக் குழந்தை ரொம்ப அழகாக இருப்பானாமே நான் பார்க்கலாமா என்று கேட்டதாலே, இந்த அசடு யசோதா குழந்தையைக் தூக்கி அவள் கையிலே தந்திருக்கு. அவள் சப்பளிக்க உட்கார்ந்து மடியிலே போட்டுக் கொஞ்சியிருக்கா. நான் இந்த குழந்தைக்கு பால் குடுக்க ஆசையா இருக்குன்னு கெஞ்சியிருக்கா. இந்த பேக்கு சரின்னு தலையாட்டியிருக்கு.
“அப்புறம்”?
“விழுப்புரம்? என்ன அவசரம்? கதையா சொல்றேன் இப்போ?”
“சரி சரி, நீயே சொல்லுடி”
"என்ன ஆச்சோ தெரியல்லை. குழந்தை அவள் மார்பகத்தில் வாய் வச்சு குடிக்க முயற்சித்தபோதே அந்த பெண் அலறிண்டே அப்படியே சாஞ்சுட்டாளாம். அவ இருந்த இடத்திலே ஒரு பெரிய ராட்சசி கோரமாக செத்துக் கிடந்தாளாம். குழந்தை அவ மேலே விளயாடிண்டிருந்ததைப் பார்த்துட்டு நந்தகோபனும் மற்ற கோபர்களும் ஓடி வந்து குழந்தையை அப்புறப்படுத்திட்டு அந்த ராட்சசி யாருன்னு கண்டுபிடிச்சிருக்கா.. அப்பறம் அவளை தூக்கிகொண்டு போய் ஊருக்கு வெளியே எரிச்சாளாம்”
“யாராம்?”
“பூதனை என்று பேராம்” குழந்தையைக் கொல்ல வந்திருக்கலாம் என்று சொல்றா. ஏதோ யசோதை பண்ணின புண்யம், கடவுள் காப்பாத்தியிருக்கார். இல்லேன்னா குழந்தைக்கல்லவோ ஆபத்து ஏற்பட்டிருக்கும்?”
“ஐயோ. குழந்தை எப்படி இருக்கு?”
“அந்தக் கரிகுண்டன் எப்போதும்போல சிரிச்சுண்டேதான் இருக்கான். எல்லாரையும் பார்த்து மயக்கறான். யசோதை கையைப் பிடிச்சுண்டு தூக்கு என்கிறான்”
“என்னமோ போடி அந்தப் பயலை பத்தி ஒவ்வொருநாளும் ஒவ்வொரு சேதி வந்துண்டே இருக்கு”
“சரியா சொன்னே, கிருஷ்ணன் ஒரு அதிசய குழந்தை தான், சந்தேகமில்லை!”

                                                   The writer can be reached at: jksivan@gmail.com
 

2 comments:

  1. Excellent blog! Enjoyed reading the story. Well done! The photos in the blog are wonderful.
    I eagerly look forward to reading more and more Krishna stories in this blog.
    Best Regards
    Meera

    ReplyDelete
    Replies
    1. Thanks indeed for your comments. In our own humble ways, Shri J.K. Sivan and I have taken it upon ourselves to propagate the glories of Krishna for instilling Krishna Bhakti in the hearts of people. Bhaktas like you are an inspiration to us. Please continue to visit the blog everyday or as frequently as possible and stay connected with Krishna.

      With many thanks once again.
      Ram

      Delete