உங்கள் மகன்
by J.K. Sivan
இது நடந்தது ஸ்ரீவாஸ் என்ற பக்தர் வீட்டில். சைதன்யர் தனது சிஷ்யர்களோடு அந்த வீட்டில் கிருஷ்ண பஜன் நடத்திக் கொண்டு ஆனந்தமாக ஆட்டமும் பாட்டமுமாக கிருஷ்ணனோடு ஒன்றி இருந்தார். ஸ்ரீவாஸ் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி மெதுவாக அவரை அணுகி உள்ளே வருமாறு அழைத்தாள். ஸ்ரீவாசின் பிள்ளைக்கு காலரா. சற்று நேரத்தில் மரணம் நிச்சயம். அவர் மனைவி அழுகிறாள். "இது இறைவனின் முடிவு. ஒரே ஆறுதல் அவன் உயிர் பிரியும் நேரத்தில் நமது வீட்டில் சைதன்ய பிரபுவின் கிருஷ்ண கானம் நடைபெறுகிறது. அதை கேட்டு அவன் உயிர் பிரிய அவன் கொடுத்து வைத்தவன். அவ்வளவு தான்."
![](http://2.bp.blogspot.com/-_-bBS_fA-R0/UN2y6Yfw9PI/AAAAAAAACHc/ksYlq6wyG2o/s320/Lord+Caitanya+with+beads.jpg)
அருகில் நின்ற பக்தரோ “சுவாமி, ஸ்ரீவாசுடைய ஒரே மகன் ரெண்டு மணி நேரம் முன்பு மரணமடைந்து விட்டான்."
"என்ன, பையன் இறந்துவிட்டானா? ஹே கிருஷ்ணா மஹா ப்ரபோ" என்றவர் கண்ணில் தாரை தாரையாக கண்ணீர்.
"எங்கே அந்த பையனின் உடல்?"
"என் அருமை செல்வமே என்ன நடந்தது சொல்? என்று சைதன்யர் அந்த உடலை கேட்டார்.
"சுவாமி, நான் இந்த உடலை விட்டு மேன்மையான இடம் செல்ல உதவினீர்கள். பிரபு என் ஆத்மா தங்கள் சரணார விந்தங்களில் என்றும் நிலைத்திட அருளவேண்டும்" இதுவரை பேசிய அவன் ஆத்மா பரமானந்தத்தோடு உடலிலிருந்து விடைபெற்றது. ஸ்ரீவாஸ்- மாலினி தம்பதிகளை அணைத்துக் கொண்டு சைதன்யர், "எதற்கு வருத்தம் இதோ உங்கள் முன்னால் நான் நிற்கிறேனே உங்கள் மகனாக என்னை ஏற்று கொள்வீர்களா?" என்றார்.
![](http://2.bp.blogspot.com/-Q9atmAq_njw/UN21rjbkYrI/AAAAAAAACIc/bcsWoER20UU/s1600/j.K.+Sivan.jpg)
The writer can be reached at: jksivan@gmail.com
No comments:
Post a Comment