விட்டலன் கதை 13
யாத்திரை
by J.K. Sivan
"அயோத்யா பிருந்தாவன் மதுரா எல்லாம் செல்லபோகிறேன் அங்கெல்லாம் நாராயணனின் அவதாரமான ராமன் கிருஷ்ணன் இருந்து வளர்ந்த க்ஷேத்ரங்கள் உள்ளனவே கண்டு களிக்கலாமே".
"இன்றும் இங்கே பக்தர்களோடு சேர்ந்து அன்றாடம் மகிழ்விக்கும் விட்டலனை விட்டு அவன் எப்போதோ எந்த அவதாரமெடுத்து வாழ்ந்த இடங்கள் எனக்கு வேண்டாமே" என்றார் நாம்தேவ்.
"எனகென்னமோ நீங்களும் வந்தால் எனது யாத்ரை மிக்க மகிழ்ச்சி அளிக்கும் என்று எண்ணம்"
"விட்டலன் சரியென்றால் எனக்கு வர சம்மதம். அவனையே கேளுங்களேன்."
ஞானேஸ்வர் விட்டலன் சந்நிதிக்கு சென்றார்.
"விட்டலா உன்னிடம் ஒன்று கேட்க வந்திருக்கிறேன்"
"என்ன ஞானேஸ்வர் கேட்கப்போகிறாய்?"
"நாமதேவர் என்னோடு வர உனது அனுமதி தருவாயா?"
"என்னை சங்கடத்தில் ஆழ்த்தி விட்டாயே. உன்னோடு நாமதேவர் சென்றால் பல இடங்களில் பக்தர்கள் மகிழ்வர் என்பது கண்கூடு, வாஸ்தவம். ஆனால் என்னால் அவரை இந்த விட்டலனுக்கு அவரை விட்டு பிரிந்திருக்க இயலாதே?' என்ன செய்வது, சரி, நீங்கள் சொல்வது போல் செய்கிறேன்"
விட்டலன் கண்களில் நீரோடு நாமதேவரை கூப்பிட்டு "ஞாநேஸ்வரோடு யாத்ரை செல்லுங்கள்" என அனுமதியளித்தான்.
அவர்களது யாத்ரானுபாவம் பற்றி தெரிந்து கொள்ள அடுத்த குட்டி கதையைத் தான் தேட வேண்டும்!
The writer can be reached at: jksivan@gmail.com
யாத்திரை
by J.K. Sivan
பல புண்ய க்ஷேத்ரங்களுக்கு யாத்ரை சென்று போகுமிடமெல்லாம் மக்களை பக்தி மார்கத்தில் ஈடுபடுத்தி வந்த ஞானேஸ்வர் ஒரு முறை பண்டரிபுரம் வந்து நாமதேவரை சந்தித்தார். இரு பாண்டுரங்க பக்தர்களும் மனமார தழுவி அளவளாவினர்."உங்களை தரிசிக்கவே இங்கு வந்திருக்கிறன். நாட்டின் பல பாகங்களுக்கு யாத்ரை செல்ல விருப்பம். அங்கெல்லாம் இறைவன் கோயில் கொண்டுள்ள க்ஷேத்ரங்களில் தரிசனம் செய்து நாம சங் கீர்த்தனத்தை பரப்ப ஒரு எண்ணம் நீங்களும் என்னோடு வரலாமே" என்று ஞானேஸ்வர் கேட்டார்
"என்னால் பண்டரிபுறம் விட்டு நகரமுடியாது. விட்டலனை பிரிந்து ஒரு கணமும் இருக்க இயலாது""அயோத்யா பிருந்தாவன் மதுரா எல்லாம் செல்லபோகிறேன் அங்கெல்லாம் நாராயணனின் அவதாரமான ராமன் கிருஷ்ணன் இருந்து வளர்ந்த க்ஷேத்ரங்கள் உள்ளனவே கண்டு களிக்கலாமே".