ஆண்டாளும் தோழியரும்
(14)
by J.K. Sivan
கள்ளம் கபடம் அறியாத உள்ளம் கொண்ட ஆண்டாளூம் அவள் தோழியரும் எவ்வளவு உண்மையான பக்தி கொண்டவர்களாயிருந்தால் அந்த பரந்தாமனிடம் “என்னவேண்டும்?” என்று அவன் கேட்டபோது, கொடி கொடு,, துணி கொடு, தம்பட்டம் கொடு,என்று
இன்னசண்டாக கேட்டார்கள். நம்மிடம் அதனால் தான் இறைவன் உனக்கு என்னவேண்டும் என்று கனவில் கூட கேட்பதில்லை!!! கிருஷ்ணன் ஆண்டாளிடம் "ஏ! சிறு பெண்ணே, இதுமட்டும் தான் வேணுமா, இந்த அழியும் அல்ப வஸ்துகள் தவிர வேறு பெரிசா எதாவதும் கேளேன்" என்றான்
"கிருஷ்ணா, பெருமானே, நாங்கள் சிறுமிகள், ஆத்துக்கு அந்தபக்கம், கீழண்டை பனந்தோப்புக்கு அடுத்து இருக்கிற கிராமத்துலே, அதோதெரியுதே அந்த வேலங்காட்டுக்கு வடக்கே, கூட என்ன இருக்கு என்று தெரியாத மாடு மேய்க்கிற அறிவிலிகள். உன்னோடு சேர்ந்து சாப்பிடணும்கிற ஆசையிலே உன்னை மரியாதைக்குறைவா பேசியிருந்தோம்னா எங்களை, கிருஷ்ணா, நீ கொஞ்சம் மன்னிச்சுடு. நீ உலகையே படைத்து
காக்கிறவன். வேதங்கள் கூறும் பரம்பொருள் குறை ஒன்றும் இல்லாத கோவிந்தன். இவ்வளவு பெரிய உன்னை ஒண்ணுமே தெரியாத சிறிசுகள் நாங்கள் தப்பா பேசியிருந்தா எங்க மேலே கோவம் வேண்டாம். மன்னிச்சு காப்பாத்து. உன்னைவிட்டா எங்களுக்கு யாரும் இல்லையே” ஆண்டாள் தனது பக்தியை எவ்வளவு சிம்பிளா வெளிப்படுத்தியிருக்கிறாள் பார்த்தீங்களா. இன்னும் ஒருநாள் மட்டுமே பாக்கியிருக்கு இந்த மார்கழி 28ம் நாளோடு. இன்று (12.1.2013) அந்த சிம்பிள் ஆண்டாள் ஸ்ரீ வில்லிபுத்தூரில் தங்க பல்லக்கில் வீற்றிருந்த கோலத்தில் நமக்கு காட்சி தருகிறாள்!
***
No comments:
Post a Comment