என்னைத் தொடாதே
by J.K. Sivan
விட்டலனுடைய அற்புத விஷயங்களை ஆரம்பித்தால் முடிவே இல்லை. எவ்வளவோ பேர் அந்த ஆனந்த அனுபவத்திலே மூழ்கியவர்கள் இருக்க அவர்களில் ஒருவரான சொக்க மேளன் என்பவர் பற்றியதே இந்த குட்டிகதை. அவர் ஒரு பரம பாண்டுரங்க பக்தர். குலத்தில் அந்த காலத்தில் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கி வைக்கப்பட்டவர்களில் ஒருவர். பாண்டுரங்கன் அவருக்கு அருமையான சாரீரம் கொடுத்திருந்ததால் பண்டரிபுரம் பாண்டுரங்கன் ஆலயத்திற்கு வெளியே தான் அவர் ஆடிப் பாடி அகமகிழ்வார். அவரது கானாம்ருதத்தில் மூழ்கியிருக்கும்வரை எவரும் அவரை தீண்டத்தகாதவர் என்று நினைக்கவே நேரமில்லை. அவருடன் அனைவரும் ஆடிப் பாடி அந்த பஜனை முடிந்ததும் தான் " நீ தாழ்ந்த ஜாதி, உள்ளே சென்று கிருஷ்ணனை தரிசிக்க முடியாது" என்கிற பூதம் புறப்படும் . தன்னந்தனியே பாண்டுரங்கனோடு ஒன்றறக் கலந்து அவனை மனக்கோவிலிலே மட்டும் கண்டு மகிழ்வார். கோவிலை நோக்கி விழுந்து வணங்கி வீடு செல்வார்.
சிலகாலம் சென்றது. எப்பவுமே தர்க்க வாதிகள், விதண்டாவாதங்கள் எல்லாம் உண்டே. ஒருநாள் ஒருவன் "சொக்கா, உன் ஆட்டம் பாட்டம் எல்லாம் நிறுத்தி இந்த கேள்விக்கு பதில் சொல். உனக்கு கிஷ்ணன் மீது அளவற்ற பக்தியும் பிரேமையும் உண்டு என்கிறாயே, பின் எதற்காக அந்த கிருஷ்ணன் உன்னை உள்ளே தரிசனம் செய்ய வைக்கவில்லை? வீணே நேரத்தைக் கடத்தாதே. புரிந்து கொள் ஒரு நாய் என்றைக்கும் ஒரு ராஜாவின் பக்கத்தில் அமர்ந்து சமபந்தியாக சாப்பிடமுடியாது. நீ எங்களைப்போல் உள்ளே வந்து கிருஷ்ணனை தர்சிக்க இந்த ஜன்மத்தில் வழியில்லை."
அருகிலிருந்தோர் உசுப்பப்பட்டு சொக்கனை அடித்து விரட்டினர் .கிருஷ்ணனை வேண்டிக்கொண்டே சொக்கன் மனமொடிந்து வீடு வந்தபோது அவன் மனைவி சாயிரா அவனை தேற்றியும் அவன் கண்ணீர் வற்றவில்லை. "நான் பிறந்தது என் குற்றமா? அந்த கிருஷ்ணனின் மீது உள்ள பிரேமையை அன்றி நான் யாருக்கும் கேடு நினைக்கவில்லையே. அதற்கு எனக்கு நேரமும் இல்லையே. எனக்கு தெரிந்தது எல்லாம் கிருஷ்ணன் கிருஷ்ணன், கிருஷ்ணன் தானே!"
இரவு இருவருமே தூங்கவில்லை. அவன் கண்ணீரைத் துடைக்க விட்டலன் சொக்கனுடைய வீட்டுக்கே வந்து
விட்டான். நம்பமுடியாத ஆனந்தத்தில் இருவரும் அவன் காலடியில் விழுந்தனர்."
பைத்தியமே! நான் இருக்க உனக்கு என்ன குறை. என்னோடு வா" என்று சொக்கனை விட்டலன் கோவில் வாசல் கதவுகள் எல்லாம் பூட்டப்பட்டிருந்தபோதும் கர்பக்ரஹத்துக்கு அழைத்து
சென்றான். முரண்டு பிடித்தான் சொக்கன்.
" நான் உள்ளே வரக்கூடாதே. உங்களுக்கு அவப்பெயர் வருமே"
"சொக்கா ஒரே இருட்டாக இந்த கோவில் இருந்ததே நாம் நுழைந்தபோது ஏன் தெரியுமா? அவர்கள் அஞ்ஞானத்தால். நீ வந்தவுடனேயே எவ்வளவு பிரகாசமாகிவிட்டது பார் உன்னால்" என்று விட்டலன் வாய் விட்டு சிரித்தான். "என்னை மனத்தால் நெருங்காதவர் எவரும் உயர்குடியில் பிறந்தாலும் தீண்டத் தகாதவர்கள் தான். என் பக்தர்களை இகழ்பவர்கள் எனக்கு தீண்டத்தகாதவர்கள்!
விட்டலனின் கருணையில் குளித்த சொக்கன் கேட்டான் "கிருஷ்ணா எப்படி வாழ்ந்தால் மோக்ஷம் கிட்டும்?"
"ரொம்ப சிம்பிள் சொக்கா! . நீ செய்கிறபடி நாம சங்கீர்த்தனம், மனதாலும் வாக்காலும் உடலாலும் பரோபகாரம், தயை, அன்பு, மற்றும் பகவத் சிந்தனையிலும் அத்தகையோரின் சத்சங்கமும். கலிகாலத்தில் இவையே ஒருவரை என்னிடம் சேர்க்கும்."
இரவெல்லாம் விட்டலனும் சொக்கனும் பேசிக்கொண்டிருந்தனர். பொழுது விடிந்து பிரதம அர்ச்சகர் கதவை திறந்து உள்ளே பேச்சு குரல் கேட்டு அரண்டு போய் அங்கே விட்டாலன் அருகே சொக்கன் நிற்பதை கண்டு வானுக்கும் பூமிக்குமாகக் குதித்தார் கோபத்தில் " மகா பாபி உள்ளே எதற்கு எப்படி வந்தாய். கோவிலின் புனிதமே போய் விட்டதே" அவனை பிடித்து வெளியே இழுத்துத் தள்ளினார்கள்.
அவன் "நான் வரவில்லை என்னை விட்டலன் தான் உள்ளே அழைத்து சென்றான்" என்பதை காதில் போட்டுக் கொள்ளவில்லை. சூரியனின் ஒளி எல்லாவற்றின் மேலும் சமமாகவே விழுகிறது. காற்று பாரபட்சமின்றி இறைவனின் அருளால் அனைவரையும் மகிழ்விக்கிறதே! இதையெல்லாம் அறியவில்லை அந்த மூடர்கள். இவனை இங்கு விட்டால் தினமும் விட்டலனுடன் உள்ளே வந்துவிடுவான் என்று அருகிலிருந்த சந்திரபாகா நதிக்கு அக்கரையில் ஊர்க்கட்டுப்பாடு பண்ணி வரவிடாமல் செய்தார்கள். விட்டலனால் ஆற்றுக்கு அந்த பக்கம் கரைக்கு செல்ல முடியாது என்ற எண்ணமோ என்னவோ?
ஒரு அதிசயம் நடந்தது. என்ன என்பதை அடுத்த கதையில் பார்ப்போம்!
The writer can be reached at: jksivan@gmail.com
Dear Sir,
ReplyDeleteI have read "Ennai thodadhey" story just now. Pictures, short stories, and articles are really simple and easy to understand. Could u please start posting "Bhagavat Gita" chapters weekly once so that I can get some knowledge and I could share with my friends?
Thank you for your great work sir.
Regards,
Viji. R (SPS)
Thank you, Viji, for your comments. The credit for the stories should go to a great devotee of Krishna, Shri J.K. Sivan. As suggested by you, we are planning to bring out the chapters in Bhagavad Gita, sloka by sloka, for the benefit of our readers. Suggestions from kind souls like you are most appreciated and treated with utmost respect. Ram
DeleteHello sir i m helen
ReplyDeleteWill you allow me to post your vittalan stories in facebook