Translate

Tuesday, 8 January 2013

ஆண்டாளும் தோழியரும் (10)
by J.K. Sivan

தெய்வத்திடம் நமது பூரண பக்தி நம்மை அவரிடம் கொண்டு சேர்க்கும் என்பதை விட அவரை நம்மிடம் கொண்டு வந்து விடும் என்பது இந்த சிறு ஆயர்பாடி பெண்ணிடமிருந்து தெரிந்து கொள்வோம்!! மார்கழி 23ம் நாள் நடந்ததை நினைவு கூர்வோம்.

அழகிய சிங்கமே வீறு நடை போட்டு உன் சிம்மாசனத்துக்கு வா, கம்பீரமாக எங்களை உன் காந்த விழியில் நோக்கிஎன்னடி பெண்களா எதற்கு என்னை எழுப்பி இங்கு உட்கார சொல்லுகிறீர்கள்?. என்ன வேண்டும் உங்களுக்கு?” என்று கேட்கும் வரை பரந்தாமன் கிருஷ்ணன் மீது அந்த ஆண்டாளுக்கு செல்வாக்கு இருந்தது பாருங்கள். கிருஷ்ணன் அவ்வாறு கேட்டதும் அவளும் அந்த பெண்களும் என்ன செய்தார்கள் தெரியுமா? அப்படியே ஆண்டாளும் அவள் கூட்டமும் கண்ணன் காலடியில் சரணாகதி என விழுந்தனர்.






கண்ணா உன் திருவடிகளே சரணம். இந்த பாதங்கள் தானே மண்ணுலகும் விண்ணுலகும் அளந்தவை. இவையல்லவோ தென்னிலங்கை சென்று ராவணாதியரை அழித்தவை. இவை தானே சகடாசுரனை உதைத்தவை. வத்சாசுரனை கன்று வடிவத்தில் வந்தவனை உதைத்து கொன்றவை. இவை தானே உன்னை சுமந்து சென்று கோவர்தன கிரியை தூக்க வைத்து குடையாக்கி இந்திரனின் சீற்றத்திலிருந்து எங்களையெல்லாம் காத்தவை. “ கண்ணா, உன் கையில் இருப்பதென்ன கூர்வேலா? அது தானே உனக்கு சென்ற விடமெல்லாம் வெற்றியையும் சிறப்பையும் தருவது. எங்களுக்கு எது கவசம் தெரியுமா? உன்னை புகழ்ந்து பாடிக்கொண்டே இருப்பது. அதுவே எங்கள் மூச்சு. எங்களை என்றும் காக்கும் சுலபமான மந்திரம்.

அம்மா, ஆண்டாளே அழகிய ஆயர்பாடி சிறுமியே! உன் வழியையே நாமும் இந்த மார்கழி 24ம் நாள் 8.1.2013 சர்வ ஏகாதசி முதல் பின்பற்றுவோமாக.
                                      

The writer can be reached at: jksivan@gmail.com
 

No comments:

Post a Comment