Translate

Sunday, 20 January 2013

உதவி
by J.K. Sivan
Shivaji and Sant Ramdas
சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் கண்களுக்கு பெயர் தெரியுமா? ஒன்று சமர்த்த ராமதாசர் மற்றொன்று துக்காராம் மகாராஜ்.ரெண்டாவது கண்ணை சிவாஜிக்கு அறிமுகப்படுத்தியது முதல் கண் தான்."நீ எப்போவாவது தேஹு கிராமம் சென்றால் அங்கு துக்காராம் என்ற ஒரு மகான் இருக்கிறார் அவரை வணங்கி வா". துக்காராமை சந்தித்தது முதல் சிவாஜி காந்தத்தால் ஈர்க்கப்பட்ட இரும்பு துண்டானார்.
சிவாஜி தேஹு சென்ற போது அங்கு அனேக சாதுக்கள் கூட்டமாக இருந்து உணவருந்தி தங்கி செல்வதெல்லாம் கண்டார். துக்காராம் முகம் சுளிக்காது அவர்களை வரவேற்று உபசரித்து உணவளித்து மகிழ்வதை எண்ணி அவருக்கு தன்னாலான பொருளுதவி செய்ய தீர்மானித்தார்.

Shivaji's offerings to Sant Tukkaram

அடுத்த முறை தேஹு சென்ற சிவாஜி ஒரு தட்டில் பழங்கள் பூவுடன் சில தங்க நாணயங்களையும் அவர் எதிரில் வைத்து வணங்கினார். தட்டை பெற்று கொண்ட துக்காராமின் உடம்பு பூரா மின்சாரம் பாய்ந்ததுபோல் நடுங்கி அப்படியே தட்டை எரிந்து விட்டு ஓடினார். என்ன நடந்தது என்று தெரியாமல் அதிர்ச்சியுற்ற சிவாஜி அருகில் இருந்த அவர் சிஷ்யர்களை பார்த்தபோது அவர்கள் " துக்காராம் மகாராஜூக்கு பணம், காசு என்று யாரவது கொடுத்தால் அவரை அது இப்படி தான் வதைக்கும். அவரிடம் யாரும் பணத்தையோ பொன்னையோ தர மாட்டார்கள் அவை அவரை துன்புறுத்தும் என்பதால்" என்றார்கள்.

மனம் வருந்திய சிவாஜி அவரை அணுகி தனது தவறை மன்னித்தருள வேண்டி "சுவாமிஜி உங்களை சுற்றி நிறைய சாதுக்கள் வந்து செல்கிறார்கள் அவர்களுக்கு வேண்டிய சிஸ்ருஷைகள் வசதிகள், உணவு எல்லாம் அளிக்க தங்களுக்கு பொருளுதவி தேவையாயிற்றே என்ற எண்ணத்தில் தான் நான் தங்க காசுகளை தட்டில் வைத்தேன்" என்ற சிவாஜியிடம் துக்காராம் என்ன சொன்னார் தெரியுமா?

"மகாராஜா, தாங்கள் என்னை சில காலமே அறிவீர். எனது சேவை என்ன, அதற்கு தேவை என்ன என்று நீங்களே மதிப்பிட்டு பொருளுதவி செய்து எனக்கு உதவ முற்படும்போது, பல ஜன்மங்களாக என்னை அறியும் அந்த விட்டலன் எனக்கு என்ன தேவை என்று உணராமலா இருப்பான், உதவாமலா போய்விடுவான். அது அவனுடைய கவலையும் பொறுப்புமல்லவா? பணத்தை தொடுவதும் பெறுவதும் அதன் மூலம் சேவை செய்வதும் என்னை பொருத்தவரை பசுவதை செய்து அதன் மாமிசத்தை உண்டு உயிர் வாழ்வது போன்ற மகாபாபம் ஆகும்."



The writer can be reached at: jksivan@gmail.com

3 comments:


  1. From: Guru Moorthi [mailto:mayavaramguru@gmail.com]
    Sent: Saturday, January 19, 2013 4:49 PM
    To: jksivan
    Subject: Re: moral story PANDURANGAN 2




    அருமையிலும் அருமையான உண்மை. நமஸ்காரம், குரு



    ReplyDelete

  2. From: Ramasubramanian Krishna Iyer [mailto:ramasubramanian.k45@gmail.com]
    Sent: Saturday, January 19, 2013 12:00 PM
    To: jksivan
    Subject: Re: moral story PANDURANGAN 2



    Sir, 'APPAPPA'. Thank you. Hari OM!. KRS

    ReplyDelete
  3. Sunday, January 20, 2013

    Nice message sir. Thank you.

    Viji

    ReplyDelete