தடை நீங்கியது
by J.K. Sivan
.
அர்ச்சகர் மாலை கோவிலைத் திறந்தார். பாண்டுரங்கன் கண்களில் கண்ணீர். கன்னம் வீங்கி சிவந்திருந்தது. ஒரு கையை கன்னத்தில் வைத்திருந்தான். புரிந்து கொண்டார்அர்ச்சகர். ஓடினார். எல்லோரையும் அழைத்தார். நடந்ததை சொன்னார்தவறு உணரப்பட்டது. அர்ச்சகரும் மற்றோரும் அக்கரைக்கு சென்று சொக்கரின்கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டனர். அர்ச்சகர் சொக்கர் கையை பிடித்து அழைத்து ஆலயப்ரவேசம் பண்ணினார்.
சொக்கர் பாண்டுரங்கன் கன்னத்தைப் பார்த்து கதறினார் 'விட்டலா, எங்கள் தவறுகளை மன்னித்து எப்போதும் போல எங்களை ரக்ஷி.” என வேண்டினார். விட்டலன் பக்தன் சொல்லை மீறி நடந்ததாக சரித்திரமே இல்லையே! மந்தஹாச வதனத்துடன் பாண்டுரங்கன் அனைவருக்கும் தரிசனம் கொடுத்தான்.
“அப்பாடா, இனி நான் ஆற்றுக்கு அக்கரை சென்று சொக்கனைப் பார்க்கப் போக வேண்டாம். அவனே தினமும் இங்கு என்னிடம் வருவானே” என்ற மகிழ்ச்சி விட்டலனுக்கு.
The writer can be reached at: jksivan@gmail.com
by J.K. Sivan
நாம் இப்போது சந்திரபாகா நதியின் அக்கரையில் ஒரு குடிசையின் அருகே உள்ளோம். சொக்க மேளரும் அவர் மனைவியும் உணவை படைத்து அதை பாண்டுரங்கனுக்கு நைவேத்யம் செய்துவிட்டு குடிசைக்கு வெளியே அமர்ந்து சாப்பிடுகிறார்கள். ஒரு மூன்றாவது ஆளும் சாப்பிட வந்திருக்கிறார். ஆமாம்,விட்டலன் ரொம்ப
நாளாக ஆகிவிட்டதேசொக்கனை பார்த்து என்று அவரது குடிசைக்கு சாப்பிடவே வந்து விட்டான்.சொக்கர் தம்பதிகளுக்கு பரம சந்தோஷம்.மாற்றி மாற்றி இருவரும் விட்டலனுக்கு பரிமாறுகிறார்கள் போதும் போதும் என்று திணறுகிறான் விட்டலன். இந்த அவசரத்தில் சாயிரா தயிர் பரிமாறும்போது கை தவறி அத்தனை தயிரையும் பாண்டு
ரங்கனின் பட்டாடை மேல் சாய்த்து விட்டாள். ரொம்ப கோவம் வந்துவிட்டதுசொக்கருக்கு.
"அறிவிருக்கா, கண்ணா மாடப்பிறையா" என்றெல்லாம் கத்தினார்.இவர் கத்தினது அந்த பக்கமாக சென்று கொண்டிருந்த விட்டலன் கோயில் பிரதம அர்ச்சகர் காதில் விழுந்தது. தன்னை தான் சொக்கன் திட்டுகிறான் என்று ஆங்காரத்துடன் வந்து பளார் பளார் என்று இரண்டு அரை சொக்கனுக்கு விட்டார். தொட்டதற்காக ஒருமுறை ஆற்றில் இறங்கி குளித்து விட்டு சென்றார்.கன்னம் வீங்கி கண்களில் ஜலம் தாரை தாரையாக சொக்கருக்கு வழிந்தது. இந்த கலாட்டாவில் விட்டலன் எழுந்து சென்று விட்டான். அர்ச்சகர் கண்ணுக்கு அவன் தென்படவில்லையே!
Sant Chokhamela's Samadhi at Pandarpur |
சொக்கர் பாண்டுரங்கன் கன்னத்தைப் பார்த்து கதறினார் 'விட்டலா, எங்கள் தவறுகளை மன்னித்து எப்போதும் போல எங்களை ரக்ஷி.” என வேண்டினார். விட்டலன் பக்தன் சொல்லை மீறி நடந்ததாக சரித்திரமே இல்லையே! மந்தஹாச வதனத்துடன் பாண்டுரங்கன் அனைவருக்கும் தரிசனம் கொடுத்தான்.
“அப்பாடா, இனி நான் ஆற்றுக்கு அக்கரை சென்று சொக்கனைப் பார்க்கப் போக வேண்டாம். அவனே தினமும் இங்கு என்னிடம் வருவானே” என்ற மகிழ்ச்சி விட்டலனுக்கு.
The writer can be reached at: jksivan@gmail.com
No comments:
Post a Comment