Translate

Wednesday 7 November 2012

Dialogue between Sri Krishna and Sahadeva in Mahabharat
by J.K. Sivan
அந்த அமைதியான வனத்தில் சல சலவென்று தெள்ளிய நீரோடு ஒரு சிற்றாறு ஓடிக்கொண்டிருக்க அதன் இரு கரைகளிலும் அடர்ந்த வாச மிகு மலர்கள் காற்று வீசிய போதேலாம் நறுமணத்தை வாரி அள்ளி வீசியது. சகாதேவன் எதோ யோசனையில் ஆழ்ந்திருந்தான். கிருஷ்ணன் வந்ததையும் கவனிக்க வில்லை. அவன் சகாதேவன் கவனத்தை கலைக்க கனைத்ததையும் கேட்கவில்லை. சஹாதேவன் தோளை தொட்டு உலுக்கி கண்ணன் :
“”சஹாதேவா!! எந்த கோட்டையை பிடிக்க யோசனை.?”
“கிருஷ்ணா, இருந்ததையே கோட்டை விட்டவர்களுக்கு எதற்கு புதிய கோட்டை ?”
“யுத்தம் வந்துவிட்டதே என்ன செய்யலாம் என்று யோசனையா?”
“யுத்தம் வரும் என்று தான் தெரியுமே எதற்கு அந்த கவலை கிருஷ்ணா?”
“அப்படியென்றால் கவுரவர்களை ஜெயிக்க முடியாதோ என்ற கவலையா?”
“அதைப்பற்றி நான் எதற்கு கவலைப்படவேண்டும்?”
“ஏன் உனக்கு பொறுப்பில்லையா?”
எல்லாம் என்னிச்சைப் படியாகவா நடக்கிறது கிருஷ்ணா?”” சஹாதேவன் சிரித்தான் .
“என்னமோ சஹாதேவா!! நீ பேசுவது, நடந்துகொள்வது எல்லாம் புரியாத புதிராகவே இருக்கிறது”
*******
என்ன பதிலையே காணோம் சஹாதேவா??”“
***********
”ஏதோ மறைக்கிறாய் சஹாதேவா!!!. சொல்லேன்”
விதியை மதி வெல்லுமா கிருஷ்ணா??”
ஏன் இந்த பீடிகை?? புரியும்படி சொல்லேன்!!”
“தெரியாதவர்களுக்கு சொல்லலாம். எல்லாமே புரிந்தவனுக்கு எதற்கு புரியவைக்க வேண்டும்?”.
“இது தான் உன்னிடம் எனக்கு பிடித்த விஷயம். சொல்லாமல் சொல்வது உனக்கு கைவந்த கலை”“
“கிருஷ்ணா. இந்த யுத்தம் வரும் என்று உனக்கு தெரியுமல்லவா?]
********
இந்த யுத்ததில் யார் அழிவர் யார் மீள்வர் என்றும் தெரியுமல்லவா ??
“எனக்கும் இந்த யுத்தத்திற்கும் என்ன சம்பந்தம் சஹாதேவா? நான் உங்கள் நண்பன். இயன்ற உதவி புரிகிறேன்”!!!
“” ஹ”” கிருஷ்ணா, நீ எங்களுக்கு மட்டுமா உதவுபவன்!!!!!???
சஹாதேவா. நீ தான் இப்போது என்னை சோதிக்கிறாய்?!!!
கிருஷ்ணா, ஒரு பொம்மலாட்டத்தில் பொம்மைகள் ஆட அந்த இயக்குபவன் அல்லவோ கயிற்றை இழுத்து பிடித்து அவன் அசைவுக்கு ஏற்ப அல்லவோ பொம்மைகள் ஆடுகின்றன இந்த யுத்தம், அதன் காரணம், அதன் விளைவு, முடிவு எல்லாம் உன்கையில் என்று எனக்கு மட்டும் தெரியும் கண்ணா!!!. நான் கவலை ஏன் படவேண்டும்?? உன்னை பற்றியே நினைத்து கொண்டிருந்தேன். இன்று ஏதோ என்னையும் மீறி ஒரு சங்கடத்தில் மூழ்கி அதால் பெரும் சேதம் விளையப்போகிறதோ என ஓர் நிம்மதியின்மை எனக்குள் தோன்றுகிறது. அது என்ன என்று தான் சிந்தித்துகொண்டிருந்தேன்.  எது வரினும் அது நீ அறிவாய் எனவே நீயே அத்தகைய சங்கடத்திலிருந்து மீட்பவன். மீட்க வேண்டும், என்று தான் உன்னைப் பற்றி நினைத்துகொண்டிருந்தேன்.
“சஹாதேவா!!! நான் என்னப்பா செய்ய முடியும்??. “நீங்கள் அனைவரும் உங்கள் துன்பத்தை நீங்களே விலைகொடுத்து வாங்கிவிட்டு அதற்கு என்னை ஏன் குறை சொல்ல வேண்டும்??. உன்னைத்தேடி துரியோதனன் வருகிறானாம். எதற்கு என்று உன்னை கேட்கத் தான் வந்தேன் நீ அதைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை!!!”.
“எனக்கே தெரியாது கண்ணா. ஆனால் இதுவே என் சங்கடமோ எனத் தெரியவில்லை, கண்ணா””
“ நடப்பது நடந்தே தீரும், வருவது பற்றி இன்று ஏன் கவலை கொள்கிறாய். என் மேல் பாரத்தை போட்டுவிட்டேன் என்றாயே நான் தானே அதை இனி சுமக்க வேண்டும். அவ்வாறே ஆகட்டும்.”””
கண்ணன் சென்றான்.
துரியோதனன் சஹாதேவனை யுத்தத்திற்கு நாள் பார்த்து கொடுக்க சொன்னதும், சகாதேவன் அமாவாசைக்கு நாள் குறித்ததும், கண்ணன் அதை போதாயன அமாவாசைக்கு மாற்றி களபலி கொடுத்து பாண்டவர்க்கு வெற்றி தேடி தந்ததும் பாரதத்தில் படிக்கிறோமே
அவனருளால் அவன் தாள் பற்றி சரணடைவோம்

 

 

The writer can be reached at jksivan@gmail.com

 

No comments:

Post a Comment